ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

காக்கா கத்தினா யாரு வருவா?

காக்கா கத்தினா யாரு வருவா?

காக்கா கத்தினா யாரு வருவா?
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
காக்கா கத்தினா யாரு வருவா?
காக்கா கத்தினா யாரு வருவா?
காக்கா கத்தினா யாரு வருவா?
காக்கா கத்தினா யாரு வருவா?
காக்கா கத்தினா யாரு வருவா?

சென்டிமென்ட்ல பின்றதுல நம்ம மக்களை அடிச்சுக்கவே முடியாது.'ரெட்டைச் சுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டி', 'காக்கா கத்தினா, விருந்தாளி வீட்டுக்கு வருவாங்கன்'னு பல மேட்டர்களை டீல் பண்ணுவாங்க.

காக்கா கத்தினா யாரு வருவா?

சில பேர் வீட்ல பெத்த பிள்ளைக்குக்கூட தேங்காய் எண்ணெய் ஓசியாத் தரமாட் டாங்க. ஒரு ரூபாயாச்சும் வாங்கிட்டுத்தான் கொடுப்பாங்க. கேட்டா, குடும்பத்துக்கு ஆகாதாம். அப்ப நல்லண்ணெய் ஓ.சி-யில் குடுத்தா மட்டும் குடும்பத்துக்கு ஆகுமா? ஏம்பா... இந்த நல்லெண்ணெய் வியாபாரிகள் எல்லாம் இந்த அவமானத்தை எப்படிப் பொறுத்துக்கிறீங்க?!

இடது கையில சீயக்காய் தேய்ச்சா, தேய்ச்சு விடுறவங்களுக்கு ஆகாதாம். எதிரிகளைப்பழி வாங்க எத்தனை சுலபமான வழி?!

சில பேர் இருக்காங்க... சாயந்தரம் லைட் போட்டா, ரெண்டு கன்னத்துலயும் மாத்தி மாத்திப் போட்டுக்குவாங்க. கேட்டா, அது லக்ஷ்மி வர்ற நேரமாம்!

இன்னொருத்தரோட முடியைச் சீப்புல இருந்து எடுக்க மாட்டாங்களாம். எடுத்தா, ரெண்டு பேருக்கும் சண்டை வருமாம். ஒரு கிராம் எடைகூட இல்லாத அந்த முடியைவெச்சு ஒரு ஹெவிவெயிட் பாக்ஸிங்கா?

காலைல எழுந்ததும் தன்னோட முகத்தைக் கண்ணாடியில பார்த்துக்கணும்னு சிலருக்கு சென்டிமென்ட். அப்பதான் அந்த நாள் நல்லதா அமையுமாம். யாருக்கு? யாருக்கோ..?!

பொம்பளைப் புள்ளைங்க புதன்கிழமை தலைக்குக் குளிச்சா, அப்பாவுக்கு ஆகாதாம். அப்ப, மழையில நனைஞ்சுட்டா? அது போல கல்யாணத்தன்னிக்கு கல்யா ணப் பொண்ணு தலைக்குக் குளிக்கக் கூடாதாம். குளிச்சா அம்மா, அப்பா வைத் தலை முழுகுற மாதிரியாம். யாத்தே... டெரரால்ல இருக்கு!

'ஹிட்' ஷா

காக்கா கத்தினா யாரு வருவா?

ன் கேரக்டர் இறந்து போவது போல் உள்ள கதையில் நடிக்கக் கூடாது என்பது த்ரிஷாவின் சென்டிமென்ட். 'பீமா', 'சர்வம்' படங்களில் அப்படி நடித்ததால்தான் அந்தப் படங்கள் ஃப்ளாப்
ஆகின என்பது அவரது நம்பிக்கை!

தொகுப்பு: செந்தில்

 
காக்கா கத்தினா யாரு வருவா?
- இரா.ப்ரீத்தி
காக்கா கத்தினா யாரு வருவா?