ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

பர்ஸில் பணம் குறையக் கூடாதா?

பர்ஸில் பணம் குறையக் கூடாதா?

பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?

லகம் முழுக்க சென்டிமென்ட்டுகள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்...

ஜப்பானில் பாம்புகள் செல்வத்தின் அடையாளம். வெள்ளைப் பாம்பாக இருந்தால், கொள்ளை லாபம் கிடைக்கும். அங்கே பல வீடுகளின் வரவேற்பறையில் வெள்ளைப் பாம்பு படத்தை மாட்டிவைத்திருப்பார்கள். ஜப்பான்காரர்கள் பாம்பைக் கொல்லவே மாட்டார்கள். பாம்பைக் கொல்வது நம்ம பாஷையில் மஹாலட்சுமியை வெளியே தள்ளிக் கதவைப் பூட்டுவது மாதிரி. பாம்புத் தோலைக் கொஞ்சம் வெட்டி எடுத்து, பர்ஸில் வைத்துக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் எவ்வளவு செலவழித்தாலும் பர்ஸில் பணம் குறையாதாம்!

பர்ஸில் பணம் குறையக் கூடாதா?

கொரியாவில், காலையில் வேலைக்குப் போகும்போது காகத்தைப் பார்த்தால் பேஜாராகிவிடுவார்கள். பள்ளிக்கூடப் பிள்ளைகள் 'காகத்தைப் பார்த்துவிடக் கூடாதே' என்று பதற்றத்தோடு திரிவார்கள். அதிலும் எக்ஸாம் நேரத்தில் சொல்லவே வேண்டாம்!

ரஷ்யாவில் கண்ணாடியை வைத்து கன்னாபின்னா சென்டிமென்ட்கள் உண்டு. அங்கே உடைந்த கண்ணாடியைப் பார்க்க மாட்டார்கள். மீறிப் பார்த்தால்,கெட்டது நடக்கும்!

அர்ஜென்டினாவில் போகிற வழியில் காசு கிடந்தால், உடனே எடுத்துக்கொள்வார்கள். அப்படிக் காசு கிடைத்தால், காசு மேல காசு வந்து கொட்டும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. கீழே கிடைக்கும் பணத்தைச் செலவு பண்ணக் கூடாது என்பதுதான் ஒரே கண்டிஷன்!

துருக்கியிலும் பூனை சென்டிமென்ட் உண்டு. அவர்கள் கறுப்புப் பூனையைப் பார்த்தால், உடனே தங்கள் தலைமுடியை ஒரு கையால் பிடித்துக்கொள்கிறார்கள். இல்லையேல் கெட்ட சகுனமாம். பாவம், மொட்டைத் தலை ஆசாமிகள்!

மெக்ஸிகோவில், முயல் வாலின் சிறு பகுதியை பர்ஸில் வைத்துக்கொண்டால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறார்கள். பாவம், மெக்ஸிகோ முயல்ஸ்! நம்மூரில் 'நரிக்கொம்பு' வியாபாரம் களைகட்டவில்லையா, என்ன!

பிரேசிலில் காபி குடிக்க முதலில் கப்பை எடுத்து அதில் சீனியைப் போடுவார்கள். அப்புறம்தான் காபியை ஊற்றுவார்கள். இப்படிச் செய்தால் பணக்காரன் ஆகலாம். முதலில் காபியை ஊற்றி அதன் மேல் சீனியைப் போட்டால் ஏழை ஆகி விடுவோமாம்.

எப்படி வசதி?

சாமிப் பொண்ணு!

பர்ஸில் பணம் குறையக் கூடாதா?

ஷூட்டிங் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் சாமி கும்பிடுவது சுனைனாவின் பழக்கம்!

 
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?
-சேவியர்
பர்ஸில் பணம் குறையக் கூடாதா?