ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்

பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்

பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்
சினேகன் கவிதைகள்
பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்
பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்
பொய்யெனப் பெய்யும் காதல்!
பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்
பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்

காதல்
நாகரிகமானதா
நாகரிகமற்றதா
சொன்னாலும் தோற்கிறது
சொல்லாமல் இருந்தாலும் தோற்கிறது!

என் கவிதைக்கு
ஒரு குணம் உண்டு...
எல்லாவற்றையும்
எளிமையாக
வெளிப்படுத்தும்...
உன்னை மட்டும்
வலிமையாக
வெளிப்படுத்தும்!

சில பார்வைகள்
சில முத்தங்கள்
சில ஸ்பரிசங்கள்
ஒன்றாய் கலந்த பிறகு
ஓர் ஊடல்...
பல ஊடல்கள்
பல தேடல்கள்
பல பகிர்தல்கள்
ஒன்றாய் கலந்த பிறகு
ஒரு மோதல்...
இதற்குப் பெயர்
காதல்!

உன்னைவிட
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?

மரம் செடி கொடி
போல்
வளர்ந்திருந்தால்
வேர்களையாவது
மறைத்து
வைத்திருப்பேன்
மனிதனாகப்
பிறந்ததினாலேயே
எனக்கானது எதையும்
மறைக்க
முடியவில்லை
என்னால்...
உன் மீது உள்ள
காதலை
சொல்லத் தெரியாமல்
சொல்லிவிட்டதைப்
போல!

எனக்கென
ஏதோ ஒன்று
உன்னிடம் மட்டுமே
இருப்பதாகத்
தோன்றுகிறது...
அதைக் கேட்டு வாங்கவும்
பிரியமில்லை.
கேட்காமல்
இருக்கவும்
முடியவில்லை...
நீயே சொல்
என்ன அது?

எதுவுமே தெரியாமல்
உன்னைக் காதலித்தேன் எல்லாம்
தெரிந்த பின்பு
உன்னை
நான் பிரிந்தேன்
எது தவறு?
எது சரி?

எனக்குப் பொய்
சொல்லத் தெரியாது
எனக்கு இது
முதல் காதல் இல்லை எத்தனையாவது
காதல் என்பதும்
தெரியவில்லை
ஆனால் - நீ
என் முதல் காதலி!

புரியாமல் வரும்
காதல்...
புரிந்ததுபோல் நடக்கும்
திருமணம்...
புரிந்தால்தான் தொடரும்
வாழ்க்கை!

பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்

பொய்களை
மட்டுமே
பூரிப்போடு
ஏற்றுக்கொள்கிறது
காதல்.
காதலை மட்டுமே
தன்
கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கிறது
பொய்!

மன்னிக்கத்
தெரியாதவர்கள்
சண்டை போடக்
கூடாது...
சண்டை போடத்
தெரியாதவர்கள்
காதலிக்கக் கூடாது...
காதலிக்கத்
தெரியாதவர்கள்
நட்புகொள்ளக் கூடாது...
நட்புகொள்ளத்
தெரியாதவர்கள்
கை குலுக்கக் கூடாது...
இப்போது சொல்
சண்டை போடுவது
தவறா..?

நீ ஆணாய் பிறந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்?
நான் பெண்ணாய்
பிறந்திருக்கிறேனா என்று
தேடிப் பார்த்திருப்பாயா?

பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்
பொய்யெனப் பெய்யும் காதல்! - சினேகன் கவிதைகள்