ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

நம்பரே நண்பர்!

நம்பரே நண்பர்!

நம்பரே நண்பர்!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
நம்பரே நண்பர்!
நம்பரே நண்பர்!
நம்பரே நண்பர்!
நம்பரே நண்பர்!
நம்பரே நண்பர்!

வாகனங்கள் 'விர் விர்' எனப் பறந்து கொண்டு இருக்கும் சாலையில் சும்மாஉட்கார்ந்த படியே சூதாட உங்களுக்கு விருப்பமா? இதோ உங்களுக்கான டெக்னிக்...

சாலையோரம் இருக் கும் புளிய மரத்தடிதான் சாலைச் சூதாடிகளின் டாப் ஸ்பாட். குறைந்தது ஐந்து பேர் கூடுவார்கள். 1-ல் இருந்து 9-க்குள் விருப்பமான நம்பரைத் தேர்வு செய்வார்கள். ஒரு நோட்டில் ஐந்து

நம்பரே நண்பர்!

பேரின் பெயரை எழுதி, கூடவே அவரவர்கள் தேர்ந்தெடுத்த நம்பரை எழுதிக்கொள்வார்கள். ஆளுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். இனி ஆட்டம் ஆரம்பம். ஒரு வாகனம் கடக்கும்போது அதன் பதிவெண்ணில் உங்கள் நம்பர் இருந்தால் 1 மார்க் கிடைக்கும். இரண்டு, மூன்று முறை உங்கள் எண் ரிப்பீட் ஆனால் யோகம்தான். எத்தனை முறை வருகிறதோ, அத்தனை மதிப்பெண். அரை மணி நேர முடிவில் மொத்த ஸ்கோர் கூட்டப்படும். யார் அதிக மார்க் வாங்கி இருக்கிறார்களோ, அவரே வெற்றி பெற்றவர். 400 ரூபாய் பம்பர் பரிசாகக் கிடைக்கும். வசதியைப் பொறுத்து

நம்பரே நண்பர்!

100-லிருந்து 500 வரையில் தொகை எகிறும். சமயங்களில் 1,000 ரூபாயைக் கூடத் தொடும். கோயம்புத்தூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, ஈரோடு என பல இடங்களில் இந்த சூதாட்டம் ஃபேமஸ். இந்த ஆட்டத்தின் விதிகள் அப்படி ஒன்றும் கடுமையாக இருக்காது. ஒருவரே இரண்டு எண்களை எடுத்துக்கொள்ளலாம். கையில் பைசா இல்லையா. மற்றவர்களோடு அணி சேரலாம். அணி மாறலாம். மாசக் கடைசியா... பந்தயத் தொகை 5 ரூபாய் வரை இறங்கும். மழை பெய்யவில்லை, விவசாயம் நொடித்துவிட்டது. கூலி வேலைக்குக் கூட கூப்பிட ஆள் இல்லையா... 1 ரூபாயில் இருந்து ஆட்டம் ஆரம்பிக்கும். காலை 10 மணிக்கு ஆரம்பித்தால், சாயங்காலம் 6 மணிக்கு ஆட்டம் முடியும். அதற்கடுத்து இருட்டில் எண்கள் தெரியாதே!

நெடுஞ்சாலை அருகே இருக்கும் கிராமங்களில் இந்த சூதாட்டம் நேர்மையாக நடக்கும். கொஞ்சம் ஒதுக்குப்புறமாக உள்ள கிராமங்களில் சில கில்லாடிகள் தில்லாலங்கடி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கிராமத்துச் சாலைகளில் குறைந்த வண்டிகளே வருவதால் ரெகுலராக 'என்னென்ன வண்டிகள் வரும், அதன் பதிவு எண் என்ன, அது எத்தனை மணிக்கு வரும்?' என்று ஒரு டேட்டா பேஸைப் பக்காவாக ரெடி பண்ணுவார்கள். நேரத்துக்கு ஏற்ப எந்த எண் அதிகம் ரிப்பீட் ஆகுமோ, அதையே சூது எண்ணாகத் தேர்ந்தெடுப்பார்கள். அப்புறம் என்ன... அம்புட்டு பணத்தையும் அள்ள வேண்டியதுதானே.

இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!

 
நம்பரே நண்பர்!
- ஆர்.சரண், அ.சுப்புராஜ்
நம்பரே நண்பர்!