ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

பழிக்குப் பழி சூதாடு!

பழிக்குப் பழி சூதாடு!

பழிக்குப் பழி சூதாடு!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
பழிக்குப் பழி சூதாடு!
பழிக்குப் பழி சூதாடு!
பழிக்குப் பழி சூதாடு!
பழிக்குப் பழி சூதாடு!

சூதாட்ட சப்ஜெக்ட் ஹாலிவுட் சினி மாக்காரர்களுக்கு அல்வா அயிட்டம் போல. கொஞ்சம் சாம்பிள்ஸ் இங்கே...

பழிக்குப் பழி சூதாடு!
பழிக்குப் பழி சூதாடு!

கேசினோ

கேசினோக்களின் கசப்பான, இனிப்பான, பரபரப்பான வாழ்க்கையைப்பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் படம் பெஸ்ட் சாய்ஸ். சூதாட்ட விடுதிகளின் உள் உலகத்தைப் பிரித்துத் துவைத்துஇருப்பார்கள். விமர்சகர்கள் இப்போதும் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள்!

ரவுண்டர்ஸ்:

பிழைப்புக்காகச் சூதாடுபவர்களை ரவுண்டர்ஸ் என்பார்கள். இந்தப் படத்தின் கதாநாயகன் படிப்பதற்காகச் சூதாடுகிறான். ஆனால், மெதுவாக அதற்கு அடிமையாகிவிடுகிறான். இருப்பதை இழப்பதும், பிறகு பரபரப்பான இறுதிப் போட்டியில் விட்டதைப் பிடிப்பதும் என படம் செம சூடு!

த ஹஸ்ட்லர்:

1961-ல் வெளியாகி ஹாலிவுட்டைக் கலக்கிய படம். பால் நியூமென், ஜாக்கி கிளிசோன் போன்ற ஜாம்பவான்களின் நடிப்பில் மிளிர்ந்த இந்தப் படம், இரண்டு ஆஸ்கர்களை அள்ளியது. பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தரும் விறுவிறு கதை.

குரோப்பியர்:

கேசினோக்களின் உதவியாளராகப் பணிபுரிபவர்களுக்கு குரோப்பியர் என்று பெயர். அப்படி ஒரு குரோப்பியரின் கதை. மசாலா படம்தான். ஆனால், நுட்பமான திருப்பங்களும், சூதாட்ட வாழ்க்கை பற்றிய பிரமாதமான திரைக்கதையும் இதன் சிறப்பு!

பழிக்குப் பழி சூதாடு!

த ஸ்டிங்:

தனது நண்பனைக் கொன்றவனைப் பழிவாங்க சூதாடுபவனின் கதை.

ஏழு ஆஸ்கர் விருதுகள், 1973-ம் ஆண்டிலேயே 160 மில்லியன் டாலர் வசூல் எனக் கலக்கிய படம் இது. இன்றும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் ரசிக்கலாம்!

கேசினோ ராயல்:

மிகச் சமீபத்தில் வந்த, ஜேம்ஸ்பாண்ட் சூதாடும் கேசினோ படம். தீவிரவாதிகளின் நடமாடும் வங்கியாக வில்லனிடம் இருக்கும் பணத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு ஜேம்ஸ்பாண்ட் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் சூதாட்டம். வழக்கமாக சாகசங்கள் மூலம் எதிரியைக் காலி பண் ணுவது ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல். ஆனால், இதில் ஒரு கேசினோவை வைத்தே பின்னிப் பெடலெடுத்திருப்பார்கள்!

 
பழிக்குப் பழி சூதாடு!
- ரயன்
பழிக்குப் பழி சூதாடு!