ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

sms - ல் உருளைக் கிழங்கு!

sms - ல் உருளைக் கிழங்கு!

sms - ல் உருளைக் கிழங்கு!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
sms - ல் உருளைக் கிழங்கு!
sms - ல் உருளைக் கிழங்கு!
sms - ல் உருளைக் கிழங்கு!
sms - ல் உருளைக் கிழங்கு!
sms - ல் உருளைக் கிழங்கு!

ருளைக் கிழங்கை வைத்து பெட் கட்டுகிறார்கள் உத்தரப்பிரதேசத்தில். 'இந்த வருடம் உ.கிழங்கு எந்த அளவுக்கு விளையும், விலை ஏறுமா, சரியுமா?' என்பதெல்லாம்கூட இவர்களுக்கு சூதாட்ட சப்ஜெக்ட்தான். இந்த சூதாடிகளுக்கு உள்ளூரில் 'சட்டா' என்று பெயர்.

உள்ளூரில் ஏதாவது மத மோதல்கள் வந்துவிட்டால் இந்த சட்டாக்களுக்குக் கொண்டாட்டம். அது பெரிய கலவரமாக மாறுமா, மாறாதா? கலவரம் வந்தால் எத்தனை நாட்களுக்குத் தொடரும்? என அதையும் சூதாடுவார்கள். வேடிக்கையான ஒரு பந்தயமும் உண்டு. குறிப்பிட்ட ஒரு கொலை வழக்கு அல்லது திருட்டு வழக்கை போலீஸால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா என்று பணத்தைக் கட்டுவார்கள்.

இன்றைய பெட் என்ன என்ற தகவல், சட்டாக்காரர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழியாகப் போய் சேர்ந்துவிடும். அவர்களும் அதே வழியில் தமது எண் மற்றும் தாங்கள் கட்டும் தொகையைக் குறிப்பிட்டு பதில் அனுப்புவார்கள். சூதாட்டம்

எஸ்.எம்.எஸ். வழியாக நடந்தாலும் பணப் பரிமாற்றம் எல்லாம் மிக நேர்மையாக நடக்கிறது. போலீஸ் எத்தனை தடவை பிடித்தாலும் சட்டாக்காரர்கள் அதை சட்டை செய்வதில்லை.

 
sms - ல் உருளைக் கிழங்கு!
-ஆர்.ஷஃபி முன்னா
sms - ல் உருளைக் கிழங்கு!