இந்தியாவில் மாது, சூது இரண்டும் திகட்டத் திகட்ட வேண்டுமா? கோ...கோ...கோவா! அங்கே தண்ணீரில் மிதக்கும் ஆறு கேசினோ கப்பல்கள்தான் ஸ்பெஷல். அதனுள்ளே பெண்களின் களியாட்டம் இன்னும் ஸ்பெஷல். இந்தக் கப்பல்கள் கோவாவின் தலைநகரான பானாஜிக்கு நடுவே ஓடும் மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 1,000 ரூபாயில் இருந்து 4 ஆயிரம் வரை என்ட்ரி ஃபீஸ் எகிறும். ஆற்றுக்கு நடுவே கப்பலின் நீச்சல் குளத்தில் கையில் விஸ்கி, கக் கத்தில் ஃபிகர் என ஆடித் தீர்க்கலாம். அதற்குத் தனி சார்ஜ்.
நேபாளில் கேசினோ சட்ட அங்கீகாரம் பெற் றது என்பதால், பல ஃபாரீன் டூரிஸ்ட்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குக் கிளம்பி விடுகிறார்கள். அவர்களை இழுக்கக் கூடுதலாகக் கப்பல்களுக்கு லைசென்ஸ் கொடுக்க கோவா யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. 'இது இந்தியாங்க' என்று உள்ளூரில் எதிர்ப்புக் குரல்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன!
|