ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!

உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!

உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!

ரெல்லாம் சூதாட்ட விடுதிகளாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஊர்கள் அப்படித்தான்...

உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!

மெக்காவ்

11 சதுர மைல் பரப்பளவில் பரபரக்கிறது இந்த சீன நகரம். இங்குள்ள வெனிடியம் மெக்காவ் எனும் ஹோட்டல் 4,000 சூதாட்ட 'ஸ்லாட்'மெஷின் கள், 800 சீட்டாட்ட மேஜைகள் என மிரட்டுகிறது. 'உலக சூதாடிகளே... ஒன்று கூடுங்கள்' என்ற மெக்காவ் விடுதிகளின் அழைப்பால்... இதுதான் இப்போது ஆசியாவின் சூதாட்ட சொர்க்கம். இந்த நகரத்தின் மொத்த வருவாயில் 70% சூதாட்ட மையங்களில் இருந்துதான் வருகின்றன. அதனால் இங்குள்ள கேசினோக்கள் 24ஜ்7 திறந்தே இருக்கின்றன!

அட்லாண்டிக் சிட்டி

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கோலோச்சும் அட்லாண்டிக் சிட்டியில் 24 மணி நேரமும் சூதாட்டம் சூடு பறக்கிறது. இங்குள்ள முக்கிய சூதாட்ட ஹோட்டலான தாஜ்மகால், நம் ஊர் தாஜ்மகாலைப் போலவே கட்டப்பட்டு இருக் கிறது. ஷாஜகான் ஆவி சும்மா விடுமா?

ஆஸ்திரேலியா

கிரிக்கெட்டில்மட்டு மல்ல... சூதாட்டத்திலும் ஆஸ்திரேலியர்கள் சிக்ஸர் அடிக்கிறார்கள். இங்கு இருக்கும் 400-க்கும் மேற்பட்ட சூதாட்ட விடுதிகள், உலக சூதாட்ட விடுதி களுக்கே சவால் விடும் அளவுக்கு வசதியானவை. சிட்னியில் உள்ள கிரௌன் கேசினோ மற்றும் ஸ்டார் சிட்டி கேசினோ இரண்டும் அசத்தலானவை!

உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!

பஹாமாஸ்

'சூதும் வேண்டும், மிச்ச நேரம் சூப்பரான ரிலாக்சும் வேண்டும்' என்பவர்களின் சாய்ஸ் பஹாமா. அழகிய பசுமைத் தீவில் விடிய விடிய சூதாடலாம். பணம் பணால் ஆனால், கடற்கரைக் காற்று சோகத்தைத் துடைத்துவிடும். பேங்க் பேலன்ஸ் வெயிட்டாக இருந்தால் தீவுகளுக்கு இடையே நீந்தி நீந்தியும் சூதாடலாம்! வாழுறானுங்கப்பா... வாழுறானுங்கப்பா!

 
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!
- சேவியர்
உலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்!