உற்சாகத்தில் மிதந்த அவர், தனக்கு டிரிங்க்ஸ் கொடுத்த பெண்ணுக்கு ஒரு வீட்டையே பரிசாகக் கொடுத்தார். கதவைத் திறந்துவிட்டவருக்கு இவர் தூக்கிப் போட்ட டிப்ஸ் ஒரு மில்லியன் டாலர்கள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் மூன்று வாரங்கள் சூதாடினார். இந்த முறை அவருக்கு லக் லேது! 28 மில்லியன் டாலர் நஷ்டம். பிரிட்டன் சூதாட்ட வரலாற்றிலேயே ஒரு தனிநபரின் அதிக பட்ச இழப்பு அதுதான். அவர் கொஞ்சமும் சலனப்படவில்லை. அவருக்கு இதெல்லாம் ஜுஜுபி. 2004-ல் இந்த சூதாடிச் சித்தன் இறந்தபோது, அவரது சொத்து மதிப்பு 5.4 பில்லியன் டாலர்கள்!
|