உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம்.
1300-களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவைதான் கிட்டத்தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள்!
தற்போதைய சீட்டுக் கட்டுகளில் இருக்கும் ராஜாக்கள் இவர்கள்தான். ஸ்பேட் – டேவிட், ஹார்ட் – சார்லஸ், டயமண்ட் – ஜூலியஸ் சீசர், கிளாவர் – அலெக்சாண்டர்!
18-ம் நூற்றாண்டுக்கு முன் வரை சீட்டுக் கட்டில் அதிக மதிப்பு ராஜாவுக்குத்தான். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ராஜாவைவிட அடித்தட்டு மக்களுக்கு அதிக மதிப்பு என கி அதிக மதிப்பு பெற்றதாம்!
சீட்டுக் கட்டில் இருக்கும் கறுப்பு, சிவப்பு படங்கள் இரவையும் பகலையும் குறிப்பவை!
சீட்டுக் கட்டில் ஜோக்கரைக் கொண்டுவந்தவர்கள் அமெரிக்கர்கள். 1870- ல் இதைக் கொண்டுவந்தார்கள்!
18, 19-ம் நூற்றாண்டுகளில் சீட்டுக் கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது பெரு வணிகமாக இருந்தது!