கொஞ்சம் டாலர்களைக் கடன் வாங்கிக்கொண்டு லாஸ் வேகாஸ் வந்தார். ஃபார்முலாபடி பிளாக் ஜாக் விளையாடினார். ஒரே நாளில் 11 ஆயிரம் டாலர்கள் அள்ளினார். கேசினோ வில் அத்தனை பேரும் எட் வர்ட் பின்னால் அலைந்தார்கள். ஜெயித்துக்கொண்டே இருந்ததால் கேசினோவில் இருந்து வெளியேற்றினார்கள். ஆளைப் பார்த்ததுமே விரட்டி அடித்தார்கள். எட்வர்ட் விடவில்லை. பொய் தாடி, மீசை ஒட்டி மாறு வேடத்தில் விளையாடத் துவங்கி னார். சக்சஸ் டிப்ஸ்கேட் பதற்காக சூதாடிகள் எட்வர்டைத் துரத்த ஆரம்பித்தார்கள். அத்தனை பேருக்கும் டிப்ஸ் கொடுக்க, 'பீட் த டீலர்' என்று ஒரு புத்தகத்தை எழுதினார். கடைக்கு வந்ததுமே 7 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. கேசினோக்களை அலற வைத்து, சூதாட்டப் பிரியர்களை அசரவைத்த ஹீரோ இவர். பிளாக் ஜாக் புகழ் லிஸ்ட்டில் டாக்டருக்குத்தான் இன்றும் முதலிடம்!
|