அயர்லாந்தில் இருக்கும் ப¤ரபல சூதாட்ட நிறுவனமான 'பேடி பவர்' (Paddy Power) பன்றிக் காய்ச்சல் சூதாட்டத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. 'எந்த ஐரோப்பிய நாட்டை முதலில் பன்றிக் காய்ச்சல் தாக்கும்' என்பதுதான் இவர்களின் முதல் பெட்டிங். அதில் ஸ்காட்லாந்துக்கு முதலிடம் தந்தார்கள்.
இது இப்படியே வளர்ந்து எத்தனை நாட்களுக்குள் நோயாளிகளின் எண்ணிக்கை நூறைத் தொடும், முதல் பலி எப்போது என்றெல்லாம் போனது. இப்போது பன்றிக் காய்ச்சலுக்கு எந்தக் கம்பெனி முதலில் மருந்து கண்டுபிடிக்கும், எத்தனை நாட்களுக்குள் கண்டுபிடிப்பார்கள்¢ என சகட்டுமேனிக்கு பெட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது.
|