ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

மனைவி பத்திரம்!

மனைவி பத்திரம்!

மனைவி பத்திரம்!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
மனைவி பத்திரம்!
மனைவி பத்திரம்!
மனைவி பத்திரம்!
மனைவி பத்திரம்!
மனைவி பத்திரம்!
மனைவி பத்திரம்!

சீட்டுக் குத்தாட்டம்! கோவை, திருப்பூர், சூலூர், பொள்ளாச்சிப் பகுதிகளில் இப்போ இது தான் ஹிட். வெள்ளிக்கிழமை இரவே ஆரம்பிக்கும் ஆட்டம் சனி, ஞாயிறு என நீளும் கொண்டாட்டம். மறைப்பு கட்டியிருக்கும் பெரிய பண்ணைத் தோட்டங்கள்தான் ஸ்பாட். திறந்தவெளி ஹோட் டல்கள் கணக்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் டேபிள், சேர்களில் சீட்டாடிக்கொண்டு இருப்பார்கள். சுற்றிலும் குறைந்தது ஐந்து இளஞ் சிட்டுகள் சகட்டுமேனிக்கு கலக்கிக் குலுக்கி உருண்டு புரண்டு ஆடிக்கொண்டு இருப்பார்கள். மறுபக்கம் மணக்க மணக்க காரசாரமாக சமையல் நடக்கும். ஆடு, கோழி, மீன் என்று எல்லாமே வதைபட்டு வறுபட்டு டேபிளுக்கு வரும். இதில் பங்கு கொள்ள குறைந்தபட்சக் கட்டணமே ஐயாயிரம் ரூபாய். இரண்டு நாள் சீட்டாட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் விளையாடுமாம். இங்கு ரம்மி (52 சீட்டு, 3 கட்டு) மற்றும் மங்காத்தா ஆட்டம் என்று சீட்டு ஆடுவார்கள். பணம் தீர்ந்ததும் வீட்டுமனை, தோட்டம், கார், டிராக்டர் என்று எல்லாமே வைத்து ஆடுவார்கள். ஒரு கட்டத்தில் சில தருமர்கள் பொண்டாட்டியையே பணயமாக வைத்து ஆட, அது பிரச்னையாகி இப்போது 'மனைவிகளை இங்கு பணயம் வைக்கக் கூடாது' என்று ஆட்ட விதி வகுத்துவிட்டார்கள். இங்கு அதிகமாகப் பணத்தை விடுபவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்தான். டான்சுக்கு மும்பை, ஆந்திரா, கேரளாவில் இருந்து வாராவாரம் புதுப் புது பெண்களை வரவழைக்கிறார்களாம்.

நல்லாத்தான்யா கல்லா கட்டுறாய்ங்க!

 
மனைவி பத்திரம்!
-பொன்சன்
மனைவி பத்திரம்!