ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

து சிங்காரச் சென்னையின் சில பந்தய சூதாட்டங்கள்...

புறா ரேஸ்

போலீஸ் அனுமதி பெற்று கிளப் மூலம் நடத்தப்படுவது தனி. பணத்துக்காக லோக்கல் ஆட்கள் நடத்துவது இனி... சென்னை டு குவாலியர் என தூர தேசம் பறக்கிற பெர்மிஷன் ரேஸ்களுக்கு 'ஹோமர்' வகைப் புறாக்களைக் களம் இறக்குவார்கள். லோக்கல் ரேஸில் சாதாரண

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

புறாக்களும், கர்ணப் புறாக்களும் களம் இறங்கும். குறிப்பிட்ட இடத்தில் மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல் வானத்தில் வட்டமிட்டால் பரிசு. போட்டித் தொகை 1,000 ரூபாய் புறாவின் உரிமையாளருக்கு. புறாவுக்கு இரை மட்டும்தான்!

பைக், ஆட்டோ ரேஸ்கள்!

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

நள்ளிரவுகளில் பீச் ரோடு, அண்ணா சாலைகளில் ஆட்டோ, பைக் ரேஸ்கள் சகஜம்தான். ஆனால், சில தில் ஆட்டோ டிரைவர்கள் பகல் நேரத்திலேயே அண்ணா சாலையில் ரேஸ் விடுகிறார்கள். டிராஃபிக்கும், போலீசும் இருக்கும் என்பதால் மிதமான வேகத்திலேயே நடக்கும் இந்த ரேஸ். சம்பந்தப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் அதை ரேஸ் என்று கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி!

பட்டப் போட்டி!

மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...

வடசென்னை ஏரியாவில் பட்டம்தான் பந்தயம். அடுத்தவரின் பட்டத்தை அறுத்து எறிந்தால் வெற்றி. ஒவ்வொரு பட்டத்திலும் ஓனரின் பெயர் இனிஷியலாக எழுதப்பட்டிருக்கும். கண்ணாடித்துகள் தடவிய பட்டத்தின் நூல்தான் (மாஞ்சா) கிழிக்கும் ஆயுதம். அசந்தால் கையையே கிழித்துவிடும் மாஞ்சா நூல். அறுபடாமல் கடைசி வரை யாருடைய பட்டம் பறக்கிறதோ அவருக்குப் பரிசு. பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தால் 100, 200-களில் சூதாட்டம் நடக்கும். இதே தொழிலாக இருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் அறுப்பார்கள். ஆங்காங்கே அறுந்து மின் கம்பிகளில் தொங்கும் இந்த மாஞ்சா நூல் பைக்கில் செல்பவர்களின் கழுத்தைப் பதம் பார்த்து உயிர் பலியும் நடந்திருக்கிறது. அதனால் இப்போது பட்டம் விடவே தடை விதித்துவிட்டது சென்னை போலீஸ்!

 
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...
-ம.கா.செந்தில்குமார், என்.விவேக்
மத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...