(சாமா, சாஸ்திரி, பாகவதர்)
சாஸ்: அடேடே! அதென்ன கையிலே? 'சந்திரலேகா' சினிமா புஸ்தகம் போலன்னா இருக்கு!
சாமா: ஆமாம். இதுல சந்திர லேகா தயாரிப்பைப் பத்திரொம்ப சுவாரஸ்யமான விவர மெல்லாம் போட்டிருக்கு.
பாக: என்னங்காணும் போட் டிருக்கு? ரொம்ப செலவாகியிருக்காமோ?
சாமா: ஆமாம், சாஸ்திரிகளே! சசாங்கன்னு வரானே இளைய ராஜகுமாரன், அவனுடைய அறையை நிர்மாணம் பண்றதுக்கு நிஜத் தேக்கு கருங்காலி இதுகளையே உபயோகித்து தத்ரூபமாகவே செய்துட்டாளாம். அதைத் தயாரிக்கிற துக்கு மட்டுமே 75,000 ரூபா செலவாகியிருக்காம்.
சாஸ்: அடே அப்பா! அந்தப் பணத்துக்கு, ஒரு பெரிய பங்களாவையே விலைக்கு வாங்கிடலாம் போலிருக்கே!
சாமா: அதே மாதிரி, அரண் மனைக்கு வெளியிலே ஒரு பாலம் தொங்கறது பாருங்கோ சங்கிலியிலே, அதுவும் நிஜப் பாலமேதானாம். அநேக இன் ஜினீயர்கள் சேர்ந்து அதைக் கட்டினாளாம் இந்த ஸினிமா வுக்காகவே!
சாஸ்: வாஸ்தவம்தான்! நாம்பதான் அன்னிக்குப் பார்த் தோமே! ஒவ்வொரு ஸெட்டிங் குமே பிரமாதமாதான் இருந் துது!
சாமா: ஸெட்டிங் மாத்திரம் தானா! ராஜகுமாரி உடுத்தியி ருந்த விதவிதமான டிரஸ்கள் என்ன! நாடோடிப் பெண்கள் உடுத்தியிருந்தார்களே, அந்த டிரஸ்கள்தான் என்ன..!
சாஸ்: குதிரைகள் என்ன...
சாமா: குதிரைகள் என்றதும் ஞாபகம் வரது! இந்தக் குதிரைகளை வைச்சிண்டு பிடிச்சிருக்கிற காட்சிகளெல்லாமே ரொம்ப ஆபத்தானதாம்! ஒரு சமயம் ரஞ்சனையே கீழே தள்ளிப்பிடுத் தாம் ஒரு குதிரை!
சாஸ்: ஐயையோ! அது வேறயா?!
சாமா: அது மட்டுமில்லே, சாஸ்திரிகளே! முரசாட்டம்கிறதும் எவ்வளவு ஆபத்தான டான்ஸாம் தெரியுமா? நாற்பது அடி உயரத்திலே முரசுகளை ஏற்றி வைச்சு, அது மேலே நின் னுண்டு டான்ஸ் பண்ணியிருக்காளாம்! கரணம் தப்பினா மரணம்னு சொல்லுவாளே, அது மாதிரிதான்!
சாஸ்: எதுக்காக அவ்வளவு உயரத்திலே நாட்டியமாட ணும்?
சாமா: அப்பத்தானே அவாளைக் கீழேயிருந்து நன்னா போட்டோ எடுக்கலாம்!
சாஸ்: ஓஹோ!
சாமா: இதையெல்லாம்விட, சிங்கத்தையும் புலியையும் மோத விட்டுப் பக்கத்துலே வந்து அதைப் படம் பிடிச்சிருக்காளே, அது இன்னும் எவ்வளவு ஆபத் துங்கிறேன்!
|