ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

'2010 - ல் நாங்கள்..!'

'2010 - ல் நாங்கள்..!'

'2010 - ல் நாங்கள்..!'
விகடன் பொக்கிஷம்.
'2010 - ல் நாங்கள்..!'
'2010 - ல் நாங்கள்..!'
'2010 - ல் நாங்கள்..!'
'2010 - ல் நாங்கள்..!'
'2010 - ல் நாங்கள்..!'

''இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின், கி.பி. 2010-ல் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?'' என்று சில நட்சத் திரங்களிடம் கேட்டதற்கு...

'2010 - ல் நாங்கள்..!'

சிவகுமார்:

'தட் ஓல்ட் சிவகுமார்'னு பேச ஆரம்பிச்சிருப்பாங்க. ஆனா, அப்போதும் என் யோகா ஸனாஸ், எக்ஸர்ஸைஸ் எதை யும் விடமாட்டேன். நிறைய டூர் அடிப்பேன். வீட்டுக்குத் தேவையான மினி சைஸ் கம்ப் யூட்டர்கள் வாங்கிப் போட்டு, கிடைக்கிற ரெஸ்ட் டைமில் பெயின்ட்டிங் பண்ணிக்கிட்டிருப்பேன். எந்தக் காரணத் தைக் கொண்டும் பாலிடிக்ஸில் மட்டும் இறங்கவே மாட் டேன்னு இப்பவே அடிச்சுச் சொல்றேன்!

சத்யராஜ்:

அப்போதும் நான் நடிகனா கத்தான் இருப்பேன். சினிமா மீடியத்தைப் பத்தி நிறையத் தெரிஞ்சு வெச்சிருப்பேன்.

ரிலாக்சேஷனை மக்கள் மேலும் மேலும் விரும்புகிறார்கள். அதனால் போகப் போக முழுமையாக மசாலாப் படங்களின் பக்கம் சாய்ந்து விடுவார் களோ என்கிற பயம் எனக்குள் இருக்கிறது.

இப்போது ரசிகர் மன்றங்களின் வளர்ச்சியைப் பார்க்கும் போது, 25 வருடங்களுக்குப் பிறகு அரசியல், நடிகர்களை நம்பித் தான் தீரவேண்டும் என்கிற விரும்பத்தகாத நிலை உருவாக லாம்!

இந்திய அரசியலில் முதல் கட்டத் தலைவர்களாக, சுதந்தி ரத்துக்காகப் போராடிய தியாகி கள் இருந்தார்கள். அவர்கள் உண்மையான தியாகிகள். அத னால் அவர்களைத் தலைவர் களாக ஏற்றுக்கொண்டார்கள்!

இரண்டாவது கட்டத் தலை வர்கள் சுயமரியாதை, சமதர்மம், முதலாளித்துவ ஆதிக்கத்தின் எதிர்ப்பு என்ற பின்னணியில் மட்டுமே வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வளர தியாகத்தைவிட, சினிமாவை அதிகம் நம்பினார்கள்.

இனி, மூன்றாவது கட்டத் தலைவர்கள் உருவாகப் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் ஆகலாம். அன்றைய நிலையில் தியாகம் செய்யவோ, மக்களுக்கு விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்தும் நிலையிலோ அரசியல்வாதிகள் இருக்கப் போவ தில்லை. அப்போது நடிகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கும்.

அரசியல்வாதி: நோ தியா கம்! மக்களுக்காகவோ, நாட் டுக்காகவோ எப்போதும் எதை யும் செய்யப் போவதில்லை.

நடிகன்: நோ தியாகம்! இவர்களும் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ எப்போதும் எதையும் செய்யப்போவது இல்லை.

சமூக வாழ்வில் தியாகம் செய்து புகழடையப் போகும் தலைவன் இனி உருவாகவே மாட்டான் என்று தோன்றுகிறது. எனக்கிருக்கிற கவலையெல்லாம், கம்ப்யூட்டர் உலகத்தில் கம்ப்யூட்டரையும் தனி மனிதனைத் துதி பாட 'புரொக்ராம்' செய்து வைத்து விடுவார்களோ என்பதுதான்! மக்கள் தங்களைத் தாங்களே எப்படியாவது வாழ வைத்து கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை.

'2010 - ல் நாங்கள்..!'

நளினி:

லோ-ஹிப் பெல்லாம் கட்டமாட் டேன். செருப்பில் ஹீல்ஸைக் குறைச்சிருப் பேன். படத்துல நடிப் பேனா, மாட்டேனாங்கிறது அப்போது வர்ற சிச்சுவேஷனைப் பொறுத்தது. ஒரு பெரிய இண்டஸ்ட்ரி ஆரம்பிச்சு அபலைப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதுக்கு ஏதாவது செய்வேன்.

இப்ப இருக்கிற சூழ்நிலை யைப் பார்த்தா, அப்போதுகூட இலங்கை ப்ராப்ளத்துக்காக உண்ணாவிரதம் இருக்கணுமோ, என்னவோ?!

சுஹாசினி:

கொஞ்சம் மெச்சூர்ட் லுக் வந்திருக்கும். ரெண்டு மூணு முடிக்கற்றைகள் நரைச்சிருக்கலாம். அம்மா ரோல் எல்லாம் பண்ண ஆரம்பிச்சிடுவேனோ என்னவோ..! இப்ப ரோடுல விளையாடிக்கிட்டிருக்கிற அரை டிராயர் பையன்கள் அப்போ மீசை முளைச்சு, ஹீரோவாகி, என்னைப் பார்த்து 'ஹாய்-மாம்'னு டயலாக் பேசிட்டிருப்பாங்க. ஆனா அந்த டயம்ல சினிமா மீடியம் படுத்துடும்னு நினைக்கிறேன். டி.வி., விளம்பரப் படங்களுடைய ஆக்கிரமிப்பு ஜாஸ்தியாயிடும்னு நம்பறேன். அதனாலே இப்ப டி.வி.-லே வர்ற ரஜினி, மிஸ்டர் அண்ட் மிஸஸ், ஹம்லோக் சீரியல்ஸ் மாதிரி ஏதாவது ஒரு சீரியல்ல ஆக்ட் பண்ண ஆரம்பிச்சுடுவேன். எத்தனை வருஷமானாலும் எங்கப்பா சாருஹாசன், இன்னிக்கு இருக்கிற அதே உருவத்தோடதான் (பைப், காதோர நரை, பான்ட், ஸ¨ட்) இருப் பாருன்னு நிச்சயமா சொல்ல லாம்!

 
'2010 - ல் நாங்கள்..!'
- அம்மு
'2010 - ல் நாங்கள்..!'