ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
விகடன் பொக்கிஷம்.
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தென்னகத்திற்குப் பெருமை
தலையங்கம்
தலையங்கம்

சென்னை மாநிலக் கல்லூரியில் பௌதிகப் பட்டம் பெற்ற 24 வயதான எஸ்.சந்திரசேகர் என்ற இளைஞர் 1935-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றார். வானியலில் தான் செய்திருந்த பௌதிக ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை, அக்காலத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானி கள் கழகக் கூட்டத்தில் படித்தார். எரிபொருள் தீர்ந்துவிட்ட பிறகு நட்சத்திரங்கள் என்ன ஆகின்றன என்பதைப் பற்றிய புதுமையான கருத்து அடங்கிய கட்டுரை அது. ஆனால், எடிங்டன் என்ற தலை சிறந்த விஞ்ஞானி அதைக் கேலி செய்து, ஏட்டுச் சுரைக்காய் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்.

தலையங்கம்

இதனால் சந்திரசேகரின் விஞ்ஞான ஆர்வம் தாற்காலிகமாகச் சற்றுத் தளர்ந்தாலும், தன் ஆராய்ச்சிப் பயிர் செழிக்க பிரிட்டிஷ் மண் ஏற்றதல்ல என்று உணர்ந்து, 1937-ம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 45 ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் செய்தார். இறுதியாக, தான் முதன்முதலில் தொடங்கிய நட்சத்திர ஆராய்ச்சியின் பலனாகக் கண்டுபிடித்த உண்மையை உறுதிப்படுத்தினார். உலகமே அதைக் கண்டு வியக் கும்படி செய்தார். அவருக்கு உறுதுணையாயிருந்து ஊக்குவித்தவர் அவரது துணைவியார் திருமதி லலிதா - அவருடன் சென்னைக் கல்லூரியில் பௌதிகம் படித்தவர்.

இந்தியாவில் முதன்முதலில் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் சகோதரரின் மகன் சந்திரசேகர், விஞ்ஞானத்திற்காக ஒரே குடும்பத்தில் இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு, அதிலும் தென்னகத்திற்கு எத்தனைப் பெரிய பெருமை!

வளர்க நமது விஞ்ஞான ஆராய்ச்சி ஆர்வம்; பாரெங்கும் பரவுக பாரதத்தின் புகழ்!

 
தலையங்கம்
தலையங்கம்