ரிச்சர்ட் மார்கஸ்:
கண் இமைக்கக்கூடக் காத்திருக்காமல் டோக்கன் மாற்றுவது ரிச்சர்ட் மார்கஸின் டெக்னிக். கேசினோக்களில் பணத்தை கவுன்டரில் கொடுத்து டோக்கன்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு டாலர் முதல் பல ஆயிரம் டாலர்கள் வரை பணத்தின் மதிப்புக்கு ஏற்ப கலர் கலராக டோக்கன்கள் கொடுப்பார்கள். மார்கஸ் மூன்று டோக்கன்களோடு ஆட்டத்தை ஆரம்பிப் பார். கையில் ஒரு 100 டாலர் மற்றும் இரண்டு 5,000 டாலர் டோக்கன்கள் இருக்கும். ஒருவேளை தோற்றுவிட்டால் 5,000 டாலர் டோக்கன்களுக்குப் பதிலாக மைக்ரோ செகண்டில் 100 டாலர் டோக்கன்களை மாற்றிவிடுவார். இதனால் மார்கசுக்கு 300 டாலர்கள் மட்டுமே நஷ்டம். ஜெயித்துவிட்டால் டோக்கன்களை மாற்ற மாட்டார். இவருக்கு 10,100 டாலர்கள் லாபம். சிம்பிள் டெக்னிக்! 33 முறை தோற்றாலும்கூட, ஒரு முறை ஜெயித்தாலே லாபம் பார்த்துவிடலாம். மார்கஸ் கேசினோ கேசினோவாக மாறி மாறி ஏறி ஏமாற்றினார். 25 ஆண்டுகளாகக் குறைந்த பட்சம் 5 மில்லியன் டாலர்கள் வரை ஏமாற்றினார். யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவரே பொறுமை இழந்து 'த கிரேட் கேசினோ ஹெயிஸ்ட்' எனும் நூலை எழுதி, அதில் தனது தில்லாலங்கடி வேலைகளைப் பற்றிச் சொல்லிவிட்டார். கேசினோ உலகமே அதிர்ந்து போனது. 'கேசினோ எப்பவும் பர பரன்னுதான் இருக்கும். நாம பதற்றப்படாம, சலனப்படாம விளையாடினா ஈஸியா ஏமாத்திரலாம்!' என்பது மார்கஸ் டிப்ஸ்!
|