ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

ஜாக்பாட் ஜன்னல்கள்!

ஜாக்பாட் ஜன்னல்கள்!

ஜாக்பாட் ஜன்னல்கள்!
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
ஜாக்பாட் ஜன்னல்கள்!
ஜாக்பாட் ஜன்னல்கள்!
ஜாக்பாட் ஜன்னல்கள்!
ஜாக்பாட் ஜன்னல்கள்!
ஜாக்பாட் ஜன்னல்கள்!

சூதாட்ட உலகின் டாப் 3 இவைதான்...

போக்கர் (Poker):

ஆயிரங்கள், லட்சங்களில் பணத்தை விசிறிவிடும் பணக் காரர்களின் வறட்டுக் கௌரவ சூதாட்டம். கிளுகிளு ஹீரோயி னும், ஒரு கையில் கோப்பையுமாக ஜேம்ஸ்பாண்ட் விளையாடுவது பெரும்பாலும் இந்த ஆட்டம்தான். யாரிடம் அதிக மதிப் புடைய கார்டுகள் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி. இரண்டு ஜோடி, மூன்று ஜோடி, வரிசை அது இது என ஏகப்பட்ட வகைகளில் இதன்

ஜாக்பாட் ஜன்னல்கள்!

மதிப்பைக் கணக்கிடுகிறார்கள். சில நிமிடங்களில் பணக்காரனாவதோ, பிச்சைக்காரனாவதோ போக்கரில் சாத்தியம்!

ஸ்லாட்ஸ் (Slots):

'கேசினோவா அப்படின்னா?' எனக் கேட்கும் அப்பாவிகளுக்காகவே இருக்கிறது இந்த ஆட்டம். கலர் கலராக டி.வி. போல இருக்கும் மெஷின்களில் நாணயத்தை நுழைத்து ஒரு பட்டனை அமுக்க வேண்டும். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது. உடனே, உள்ளே வீல்

ஜாக்பாட் ஜன்னல்கள்!

சுற்றும். மானிட்டரில் வரிசையாகப் படங்கள் சுழலும். அவை சுழன்று நிற்கும்போது குறிப்பிட்ட வரிசையில் படங்கள் வந்தால் சக்சஸ். எல்லா படங்களும் ஒரே மாதிரி வந்தால் ஜாக்பாட்! மெஷினில் இருந்து பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும்!

ரூலெட் (Roulette):

ஜாக்பாட் ஜன்னல்கள்!

'வை ராஜா வை' விளை யாட்டுதான். ஒரு சக்கரத் தைச் சுற்றிவிட்டு அதன் மேல் ஒரு பந்தை எதிர் திசையில் சுற்றிவிடுவார்கள். மேஜையில் சக்கரம் ஆக்கிரமித்த இடம் போக, மற்ற இடத்தில் 0 முதல் 36 வரையும், 00 என்ற எண்ணும் எழுதப்பட்டு இருக்கும். நாம் பணத்தை ஏதாவது ஒரு நம்பரில் வைத்துவிட்டு, நகம் கடித்துக் காத்திருக்க வேண்டியதுதான். பந்தும் சக்கரமும் சுற்றி முடிக்கும்போது எந்த நம்பரில் பந்து செட்டிலாகிறதோ அந்த நம்பரில் பணம் கட்டியவர்கள் பாக்கியவான்கள். மற்றவர்களுக்குக் கடித்துத் துப்பிய நகம்தான் மிச்சம்!

 
ஜாக்பாட் ஜன்னல்கள்!
-சேவியர்
ஜாக்பாட் ஜன்னல்கள்!