மது, மாது, சூது... இந்த மூன்றில் மதுவுக்கு பாரீஸ். மாதுவுக்கு ஆம்ஸ்டர்டேம். சூதாட்டத்துக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம்.
'தூங்கா நகரம்', 'முத்து நகரம்' போல லாஸ் வேகாஸ் நகரத்தை அமெரிக்கர்கள் 'குற்ற நகரம்' என்கிறார்கள். நகரம் முழுக்க கேசினோ எனப்படும் சூதாட்ட மையங்கள்தான். உலகம் முழுக்க இருந்து சூதாட்டப் பிரியர்கள் குவிவதால், வருடம் முழுக்க கும்பமேளா எஃபெக்ட்டிலேயே இருக்கும். லாஸ் வேகாஸில் உள்ள மொத்த ஹோட்டல்களிலும் சேர்த்து 67 ஆயிரம் அறைகள் உள்ளன. ஒவ்வொரு ஹோட்டலிலும் ரம்மியில் துவங்கி கீனோ, போக்கர், ஸ்லாட் மெஷின், பிளாரி ஜேக் என்று வகை |