ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்.
தீவிரமாக இந்து மத ஆசாரத்தைப் பின்பற்றிய சாணக்கியர், பத்ரபாகு என்னும் சமணத் துறவியின் தலைமையில் பத்தாயிரம் துறவிகளுடன் மைசூர் சிரவண பெலகுலாவுக்குச் செல்ல சந்திரகுப்த மௌரியருக்கு எப்படி அனுமதி தந்தார்?
சாணக்கியர் (கௌடில்யர்) சந்திரகுப்த மௌரியரின் மதகுரு இல்லை. பிரதான அமைச்சராகத்தான் இருந்தார். 'அர்த்த சாஸ்திர'த்தில் மிகவும் பிராக்டிகலாக அரசரின் கடமைகளைப் பற்றியும், நிர்வாக வழிமுறைகளைப் பற்றியும்தான் அவர் எழுதினார். மத விஷயங்களில் கருத்துக்கள் சொன்னதாகக்கூடத் தெரியவில்லை. சந்திரகுப்தர் கடைசி காலத்தில்தான் சமண மதத்துக்கு மாறினார். அப்போது மகத நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதில் மன்னர் சோகத்தில் மூழ்க, அப்போது நிகழ்ந்த மாற்றம் அது என்கிறார்கள். பிறகு, நீங்கள் சொன்ன மைசூர் பயணம் நிகழ்ந்தது. ஜைன மகான்களைப் போல மன்னர் தவம் இருந்து, பட்டினி கிடந்து இறந்ததாகத் தகவல் - கி.மு 297-ல்.
|