உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
ஒரு வீட்டின் மாடி அறையில் 3 குண்டு பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் கீழ்த் தளத்தில் இருக்கிறீர்கள். குண்டு பல்புகளுக்கான சுவிட்சுகள் கீழ்த் தளத்தில்தான் இருக்கின்றன. எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரே ஒரு முறை மாடி அறைக்குச் சென்று வரலாம். இந்த நிபந்தனைகளுடன் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?- இது சென்ற வாரக் கேள்வி.
படித்தவுடனே சுவிட்ச் போட்டது போல உங்கள் மூளையில் பல்பு எரிந்ததா? குட்! கொஞ்சம் டியூப் லைட் கணக்காக சிரமப்படுபவர்களுக்கு இதோ பதில்... கீழ்த் தளத்தில் உள்ள மூன்று சுவிட்ச்களில் ஒன்றை இயக்கி, சில நிமிடங்கள் கழித்து அதை அணைத்துவிடுங்கள். இப்போது வேறொரு சுவிட்சைப் போட்டுவிட்டு, மாடிக்குச் செல்லுங்கள். ஒரு பல்ப் எரிந்துகொண்டு இருக்கும். கீழே நீங்கள்இயக்கி விட்டு வந்த சுவிட்ச்தான் எரிந்துகொண்டு இருக்கும் பல்புக்கான சுவிட்ச். எரியாமல் இருக்கும் இரண்டு பல்புகளையும் தொட்டுப் பாருங்கள். எந்த பல்பு சூடாக இருக்கிறதோ அந்த பல்புக்கான சுவிட்ச்தான் முதலில் நீங்கள் இயக்கியது. ஆக, மூன்றாவதுபல்புக் கான சுவிட்சை இப்போது சுலபமாகக்கண்டுபிடித்து விடலாம்தானே!
இப்படியாக, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல புதிர் சூழல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதுதான் கல்வியின் பணி. நாம் இதுவரை கல்வியின் பல்வேறு பயன்பாடுகள், புதிய சிந்தனைகளை நடைமுறைக் கல்வியில் புகுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அலசி வந்திருக்கிறோம். உண்மையில் கல்வி என்பது வெறுமனே பாடப் புத்தகங்களின் பக்கங்களுக்குள் முடங்கிவிடுவதில்லை. நமது வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் அர்த்தமும் இனிமையும் நிறைந்ததாகவும் மாற்றுவதுதான் கல்வி. ஆனால், அந்த அர்த்தத்தில்தான் இன்றைய நடைமுறைக் கல்வி உள்ளதா? இப்போதுள்ள கல்வி முறை, வேலைக்குத் தேர்வாகும் |