விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

புதிர் போடும் சிங்க மனிதன்!

புதிர் போடும் சிங்க மனிதன்!

புதிர் போடும் சிங்க மனிதன்!
இணைப்பு - அனிமல் விகடன்
புதிர் போடும் சிங்க மனிதன்!
புதிர் போடும் சிங்க மனிதன்!
புதிர் போடும் சிங்க மனிதன்!
புதிர் போடும் சிங்க மனிதன்!
புதிர் போடும் சிங்க மனிதன்!

ப்போதுமே கற்பனை வசீகரமானது. அப்படி உலகெங்கும் உலா வரும் சில கற்பனைப் பாத்திரங்கள்...

புதிர் போடும் சிங்க மனிதன்!

ஃபீனிக்ஸ்:

அன்னம் பாதி, கழுகு பாதி சேர்ந்து செய்த கலவை இது. 'நரை கூடிக் கிழப் பருவம் எய்தும்போது தானாகவே எரிந்து சாம்பலாகிவிடும். பிறகு, சாம்பலில் இருந்து உயிர் பெற்றுவரும்' என்பது ஃபீனிக்ஸ் பற்றிய கிரேக்க நம்பிக்கை. இதன் கண்ணீருக்கு எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை உண்டாம்!

புதிர் போடும் சிங்க மனிதன்!

டிராகன்:

பாம்பு உடலில் கால்களும், இறக்கைகளும் பொருந்திய அழகிய டிராகன், சீனர்களின் காவல் தெய்வங்கள். நம் ஊர் பிள்ளையார் மாதிரி மழை, வெயில் என ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு டிராகன் உண்டு. ஐரோப்பாவிலும் டிராகன் உண்டு. ஆனால், அங்கே டிராகன்கள் மோசமானவை!

ஸ்பிங்க்ஸ்:

இது எகிப்தின் கற்பனை. சிங்க உடலும் மனிதத் தலையும்கொண்டது. எப்போதும் ஒரு புதிருடன் காத்திருக்கும். புதிருக்குச் சரியாகப் பதில் சொல்பவர்கள் புதையல் பாதைக்கு உள்ளே போகலாம். தவறாகச் சொன்னால் தன் வயிற்றுக்கு உள்ளே அனுப்பிவிடும். இந்தியா விலும் ஸ்பிங்க்ஸ் உண்டு. பெயர்... யாளி!

கடல் கன்னி:

இது ஓர் அழகான ராட்சஸி. கப்பலில் வரும் அழகான ஆண்களைக் கண்டால், பாடி வசியப்படுத்தி கடலுக்கு அடியில் இருக்கும் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றுவிடுமாம்!

புதிர் போடும் சிங்க மனிதன்!

யூனிகார்ன்:

கிரேக்க, லத்தீன் புராணங்களில் வரும் ஒற்றைக் கொம்புக் குதிரைகள்தான் யூனிகார்ன். எந்த விஷத்தையும் தன் கொம்பால் முறியடித்துவிடுமாம். இது ஒரு தனிமை விரும்பி!

 
புதிர் போடும் சிங்க மனிதன்!
-கார்த்திகா குமாரி
புதிர் போடும் சிங்க மனிதன்!