விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

வில்லன் விலங்குகள்!

வில்லன் விலங்குகள்!

வில்லன் விலங்குகள்!
இணைப்பு - அனிமல் விகடன்
வில்லன் விலங்குகள்!
வில்லன் விலங்குகள்!
வில்லன் விலங்குகள்!
வில்லன் விலங்குகள்!
வில்லன் விலங்குகள்!

பூமியில் வாழும் விலங்கினங்களில் மோஸ்ட் டேஞ்சரஸ் லிஸ்ட் இது.

வில்லன் விலங்குகள்!

ஆஸ்திரேலியன் பாக்ஸ் ஜெல்லி மீன்கள் ( Australian Box Jellyfish ):கடுமையானது. இந்த மீன் கடித்தால் ஏற்படும் வலி தாங்க முடியாததாக இருக்கும். உடனே மயக்கம் வரும். இதன் விஷம், தோல், நரம்பு, இதயம் அனைத்தையும் ஒரே நேரத்தில் தாக்கி, மாரடைப்பு ஏற்படும். நிமிடங்களில் மரணம் நிச்சயம். ஒரு ஜெல்லி மீனால் தொடர்ந்து 60 மனிதர்களைத் துடிக்கத் துடிக்கக் கொல்ல முடியும்!

வில்லன் விலங்குகள்!

கேப் எருமை (Cape Buffalo): ஆப்பிரிக்காக் காடுகளில் காணப்படும் மெகா சைஸ் எருமை இது. மூர்க்கம்தான் இதன் ஸ்பெஷல். சில சிமயம் சிங்க ராஜாவையே 'வந்து பார்' என்று மல்லுக்கட்டித் துரத்தி அடிக்கும். மனிதர்களைக் கண்டால் ஓடி வந்து நெஞ்சில் முட்டும். மோதுகிற வேகத்தில் நெஞ்சு பிளந்து சொர்க்கமோ, நரகமோ உடனடி டிக்கெட். நம்ம ஊர் அரசியல் மாநாடுகள் போல் ஆயிரக்கணக்கில் தான் இவை திரியும். சில சமயம் குரூப் அட்டாக்கும் கொடுக்கும்!

ஆஸ்திரேலிய கடல் முதலை (Australian Saltwater Crocodile): ஊர்வன வகையில் இதுதான் உலகத்திலேயே பெரியது. சராசரியாக 20 முதல் 23 அடி நீளம். ஒரு இரையைக் குறி வைத்துவிட்டால் மணிக்கணக்கில் பொறுமையாக இருந்து லபக்கிவிடும். ஆடு, மாடு, மனிதன், சிறுத்தை என இதன் ஃபேவரைட் டிஷ் லிஸ்ட் ரொம்பப் பெரியது!

விஷ அம்பு தவளை (Poison Dart Frog): ரங்கோலி கலரில் ஜொலிக்கும் இந்தத் தவளை யின் உடம்பு முழுக்க விஷம்! இது ஒரு முறை உமிழும் விஷம் 10 மனிதர்களைக் கொல்லும். தென் அமெரிக்கப் பழம் குடியினர் இந்தத் தவளைகளின் விஷத்தை அம்புகளின் முனையில் தடவி எதிரிகளைக் கொல்வது வழக்கம்!

வெள்ளைச் சுறா (Great White Shark): 'ஜாஸ்' படங்களைப் பார்த்தவர்களுக்கு இதன் கொடூரம் தெரியும். 20 அடி ந¦ளம்கொண்ட இந்த சுறாவின் பற்கள் ரம்பத்தைப் போல கூர்மையாக இருக்கும். இரண்டு, மூன்று சொட்டு ரத்தத்தைக் கடல் நீரில்விட்டாலே பல கி.மீ. தூரத்தில் இருந்து மோப்பம் பிடித்துத் தேடி வரும்.

சிக்கினால் கொத்துக்கறிதான்!

 
வில்லன் விலங்குகள்!
-பா.முருகானந்தம்
வில்லன் விலங்குகள்!