நமக்குக் கைரேகை மாதிரி ஒவ்வொரு வரிக்குதிரையின் வரிகளும் பிரத்யேகமாக இருக்கும்!
முதலை சாப்பிட்டுவிட்டு வாயைத் திறந்து கரையில் காத்திருக்கும். அப்போது கிரிஸ்ட் என்ற மிகச் சிறிய பறவை முதலை வாய்க்குள் நுழைந்து அதன் பல் இடுக்குகளில் சிக்கிய உணவுகளைத் தின்றுவிட்டுப் போகும்!
இருட்டில் மனிதன் பார்ப்பதைவிட, ஆறு மடங்கு தெளிவாகப் பார்க்கும் பூனை!
குறுகலான இடத்துக்குள் நுழையும்போது தன் மீசை பக்கச் சுவர்களில் இடித்தால் பூனை திரும்பி வந்துவிடும். மீறிச் சென்றால், உடல் மாட்டிக்கொள்ளும் என்பது பூனையின் கணக்கு!
உலகில் ஒவ்வொரு வருடமும் விமான விபத்தில் இறப்பவர்களைவிட கழுதையால் கடிபட்டு, மிதிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாம்!
ஒரு விஷத் தவளையின் உடலில் உற்பத்தி ஆகும் மொத்த விஷத்தையும் வைத்து 2,200 மனிதர்களைக் கொல்ல முடியும்!
நாய்களால் 10 விதமாக ஒலி எழுப்ப முடியும். பூனைகளால் 100 விதங்களில் ஒலி எழுப்ப முடியும்!
விட்டில் பூச்சிகள் விளக்கு நோக்கிச் செல்வது இல்லை. விளக்கு ஒளிக்குப் பின்னால் உள்ள வெளிச்சம் குறைவாக உள்ள பகுதியை நோக்கிச் செல்வதால்தான் தீக்குள் விழுந்து உயிர் துறக்கின்றன!
வவ்வால்கள் தமது இருப்பிடத்தைவிட்டு வெளியேறும்போது இடதுபுறம்தான் திரும்பும்!
கோழி இறக்கையை விரித்துப் படுத்தாலோ, எறும்புகள் தாங்கள் இட்ட முட்டையைத் தூக்கிக்கொண்டு வேறு இடம் போனாலோ, விரைவில் மழை பெய்யும் என்பது நம் கிராமத்து நம்பிக்கை!
நத்தைகள் மூன்று மாதங்கள் இடைவிடாமல் தூங்கினால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உணவில்லாமல் காலம் தள்ளும்!
செவன்சிஸ்டர் வகைக் குருவிகள் எப்போதும் ஏழு குருவிகளாகச் சேர்ந்தே இருக்கும். இவை குதித்துக் குதித்து மட்டுமே நடக்கும்!
நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் சண்டை போடுவது உணவைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஏற்படும் சண்டையே தவிர, இனப் பெருக்கத்துக்காக அல்ல!
பாம்புதாரா எனப்படும் தண்ணீர்ப் பறவை கழுத்தை நான்கு திசைகளிலும் திருப்பும் திறன் கொண்டது. தண்ணீரில் 100 மீட்டர் ஆழம் வரை போய் உணவு தேடும். இது ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து சுவாசிக்கும் திறன்கொண்டது!