காட்டுப் புறா: இந்தப் புறாக்கள் யாருக்கும் கட்டுப்படாது. காட்டில் இரை தேடும். பொழுது சாய்ந்தால், ஏதாவது கோயில் மாடங்களிலோ கட்டடங்களின் சாளரத்திலோ செட்டில் ஆகிவிடும். வேட்டைக்குப் போகும் ஆட் களின் வலைகளில் சிக்கி சிக்ஸ்டி ஃபைவ்வாகவும், குழம்பாகவும் கொதிப்பது இந்தப் புறாக்கள்தான்.
பச்சைப் புறா: கிட்டத்தட்ட கிளியைப் போலவே இருக்கும். அடர்ந்த காடுகளில் மட்டுமே பார்க்க முடியும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வந்தவர்கள் பச்சைப் புறாவின் ரத்தம் குடித்தால் நோய் பறந்துவிடும் என்பது கிராமத்து வைத்தியம். அதனால் பச்சைப் புறாவுக்கு ஏக மவுசு. ஒரு ஜோடிப் புறா 1,000 ரூபாய் வரை விலை போகும்!
|