டங்கா கொர்டாக்: உலகின் மிகச் சிறிய குட்டி நாய் எனும் கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரன். சிக்குவாகுவா எனும் நாய் இனமே மிகச் சிறியதுதான். அதிலேயே மிகச் சின்னது இது. 5.4 இஞ்ச் உயரம், 7.4 இஞ்ச் நீளம், அவ்வளவுதான் இந்த நாயின் அளவு!
மிஸ்டர் பீபிள்ஸ்: உலகின் மிகச் சிறிய பூனை. நீளம் 19.2 இஞ்ச், உயரம் 6.1 இஞ்ச். ஒரு சின்ன டம்ளருக்குள் செட்டிலாகிவிடும் அளவுக்குச் சின்னது. 2004-ம் ஆண்டின் கின்னஸ் ரெக்கார்டு ஹோல்டர்!
தும்பெலினா: இது உலகிலேயே மிகச் சிறிய குதிரை. இதன் நீளம் வெறும் 17 இஞ்ச். எடை 26 கிலோ. மிகச் சிறிய குதிரை என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் குதிரையில் எந்த ராசகுமாரன் பவனி வருவானோ?!
பம்பிள் பீ வவ்வால்: ஏதோ கொஞ்சம் பெரிய சைஸ் ஈ போல இருக்கும் மிகச் சிறிய வவ்வால். உலகின் மிகச் சிறிய பாலூட்டி. ஒண்ணே கால் இஞ்ச் நீளம். எடை வெறும் இரண்டு கிராம். 1974-ல் இந்த வவ்வால் கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்தின் கிட்டி தோங்லோன்கியா என்பவர் இதைக் கண்டு பிடித்ததால் இதற்கு கிட்டி பன்றி மூக்கு வவ்வால் எனும் பெயரும் உண்டு!
|