எங்கேயும், எப்போதும் நாய்கள்தான் எல்லோருக்கும் செல்லம், இவர்களுக்கும்...
மரியா கரேயின் மனதில் மட்டுமல்ல, அவருடைய பல ஆல்பங்களிலும் இடம் பிடித்திருக்கிறது இந்த நாய். ஜேக் என்பது மரியா இட்ட பெயர்!
வசீகரப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சுக்கு இந்த நாய்க்குட்டின்னா அவ்ளோ இஷ்டம். 'சிகுவாகுவா' வகையைச் சேர்ந்த இந்த நாயின் கழுத்தில் பிரிட்னி போட்டிருக்கும் வைர மாலை நம்ம சொத்தை விற்றாலும் தாங்காதுங்கோ!
ஒபாமாவின் இந்த நாய்க்குட்டிக்கு 'போ' என்று பெயர். அதிபருக்காக மின்னும் ஃப்ளாஷ்களில் சரிபாதி இதன் மீதும் விழுகிறது!
செரீனா வில்லியம்ஸின் செல்ல நாய் ஜாக்கீ. பெட்ரூம் வரைக்கும் அனுமதி உண்டு. டென்னிஸ் கிரவுண்டில் ஜாக்கியையும் பார்க்கலாம்!
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித், ரோட்வீலர் நாய்களைப் பெரும் கூட்டமாக வளர்க்கிறார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு வாக்கிங் வேறு. நாய்களுக்கு என்று தனியே டிரட் மில்லும் இவரிடம் உண்டு!
தன்யா