சிங்க ராஜா
2005-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஒரு ரௌடிக் கும்பல், ஒரு சிறுமியைக் கடத்திச் சென்றது. காட்டுக்குள் அடைத்து ஏழு நாட்களாகக் கடும் சித்ரவதை செய்தார்கள். சிறுமி யின் அழுகுரலும், அலறல் சத்தமும் மனிதர்களை எட்டியதோ, இல்லையோ சிங்கத்துக்கு எட்டியிருக்கிறது. கர்ஜித்தபடி வந்த சிங்கக் கூட்டம் ரௌடிகளைத் துரத்தியடித்து, சிறுமியைச் சுற்றி அரண் போல் நின்றுகொண்டது. மீட்புக் குழு வந்த பிறகுதான் சிறுமியைவிட்டு விலகிச் சென்றது. ''சிறுமியின் கூக்குரல் தங்கள் குட்டிகளின் குரல் போலவே சிங்கங்களுக்குக் கேட்டிருக்கலாம்'' என்கிறார், சிங்க ஆராய்ச்சியாளர் டூவர்ட்.
என்ன இருந்தாலும் காட்டு ராஜால்ல!
|