இது ஒரு பறவைக்கும் மரத்துக்கும் இடையிலான பந்தத்தை விவரிக்கும் உண்மைக் கதை!
40 வருடங்களுக்கு முன்பு மொரீஷியஸ் தீவில் மரங்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. கல்வேரியா மேஜர் (Calvaria major) என்ற மரத்தின் எண்ணிக்கை 20-ஐக்கூடத் தாண்டவில்லை. ஒரு காலத்தில் கல்வேரியா மேஜர் மரங்கள்தான் அந்தத் தீவின் அடையாளம். இடையில் என்ன நடந்தது? அது 'டோடோ' ரகசியம்!
300 வருடங்களுக்கு முன்பு வரை அந்தத் தீவில் டோடோ (dodo) என்ற பறவை இனம் இருந்தது. கல்வேரியா மேஜர் மரத்துப் பழங்களை விழுங்கி, டோடோவின் எச்சம் வழியே வரும் விதைகள் வழியாக மட்டுமே அந்த மரம் முளைத்திருக்கிறது. பிரெஞ்சுக்காரர்கள் அந்தப் பறவைகளை வேட்டையாடி டோடோவே இல்லாமல் அழித்துவிட்டனர். விளைவு, கல்வேரியா மரங்களும் அழிகின்றன!
|