'ஆடுங்கடா... மச்சான் ஆடுங்கடா... அழகான பொண்ணைப் பாத்து பாடுங்கடா!' - கும்பல் கோரஸ் பாட, நடுவில் நச்சென்று ஆடிக்கொண்டு வருகிறது ஒரு வெள்ளைக் குதிரை. உடம்பில் சிவப்பு ஜிகினாத் துணி, முன்னங்கால்களில் சலங்கை. இந்த குதிரைக் குத்தாட்டம் நடந்த இடம் அந்தியூர் சந்தை!.
''இது சுழி சுத்தமான வெள்ளைக் குதிரைங்க. ஏழு வயசாகுது. ராஜ புரவின்னு சொல்வாங்க. விலை ரெண்டு லட்சமாகுது. கோயில் திருவிழா, |