தேவையான நாய்க் குட்டிகளை 'கென்னல் கிளப் ஆஃப் இந்தியா' அமைப்பின் மூலம் வாங்கு கிறார்கள். மூன்று மாதக் குட்டியாக (பப்பி) இருக்கும் போதே பயிற்சி ஆரம்பித்துவிடும். கீழ்ப்படிதல், மோப்பம் பிடித்தல் இரண்டும்தான் அடிப்படைப் பயிற்சி.
பின்னர் குற்றவாளிகள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கண்டறிவதுபற்றி ஸ்பெஷல் கோச்சிங் கொடுக்கிறார்கள். பால், அவித்த முட்டை, எனர்ஜி டானிக், மாட்டுக் கறி பிரியாணி, ரொட்டித் துண்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாய்க்கும் இன்னர், அவுட்டர் என்று இரண்டு அறைகள் ஒதுக்கப்படும். இன்னர் அறையில் நாய்கள் ஓய்வெடுக்க ஃபேன் இருக்கும். அவுட்டர் அறை என்பது கம்பிவேலி போட்ட திறந்தவெளிப் புல் வெளி. அதில் மோப்ப நாய்கள் வாக்கிங் போகும். ராஜபோகமாக வாழ்ந்தாலும் ஒரே ஒரு குறைதான்... போலீஸ் மோப்ப நாய்கள் இனவிருத்திக்கு அனுமதிக்கப் படுவது இல்லை.
ஆண் நாய்களைவிடப் பெண் நாய்களே அதிகமான நாட்கள் உயிர் வாழுமாம். சிறப்பாகவும் பணியாற்றுமாம் (இங்கேயுமா?). அதனாலேயே பெரும்பாலும் பெண் குட்டிகளையே தேர்வு செய்கிறார்கள். 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு நாய் களுக்கு ரிட்டையர்மென்ட்!
|