நூற்றுக்கு மேல் என்ன மார்க்?
'பணமா பாசமா' என்ற படத்தில் முதல் நாள், வரலட்சுமி உணர்ச்சிகரமாக நடிக்கவேண்டிய ஓர் இடத்தைப் படமாக்கினேன். எனக்குத் திருப்தியாக இல்லை. அன்று இரவே சாவித்திரியிடம் ஓடிப் போய், அவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கேட்டேன்.
''என்னது! அவருக்கு (ஜெமினிக்கு) மாமியாராகவா? மன்னித்துக் கொள்ளுங்கள். வரலட்சுமியே நன்றாக நடிப்பார், கவலைப்படாதீர்கள்!'' என்று சொல்லி அனுப்பினார். மீண்டும் வரலட்சுமியிடம் போய் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து, பாத்திரத்தை விளக்கினேன். மறுநாள் முதல் பிரமாதமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் வரலட்சுமி. முதல் நாள் பத்து மார்க் கூட கொடுக்க முடியாத நான், மறுநாளே, அவரின் நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கக் கடமைப்பட்டவனாகிவிட்டேன்.
'உயிரா மானமா' படத்திலும் பிய்த்து உதறி, அதற்கு நூற்றுக்கு மேல் என்ன மார்க் கொடுப்பது என்ற பிரச்னைக்கு என்னை ஆளாக்கி விட்டார் வரலட்சுமி.
- இயக்குநர்கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (3-8-69)
|