மயிலாப்பூர் குளத்தருகில் இருந்த தெரு வழியே, பழைய கோட்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, முகத்தை மறைத்தபடி நடந்து சென்று கொண்டிருந் தார் மருதநம்பி. அவர் தேடி வந்த தெரு அதுதான். இருட்டி விட்ட நேரம் அது. ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே சென்றவர், ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு |
முன்பு மணிமொழி வந்து, முதல் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்ற அதே வீடுதான். பொன்மலை என்னும் பெரிய வர் முன்பு அங்கிருந்தார். இப்போதும் அங்கே அவர்தான் இருந்தார்.
மருதநம்பி வாயிற்படியில் ஏறிக் கதவைத் தட்டியதும், பொன்மலை கதவைத் திறந் தார். மருதநம்பியை உற்றுப் பார்த்துவிட்டு, ''யாரது? மருத நம்பியா! உள்ளே வாருங்கள்'' என்றார். மருதநம்பி உள்ளே போனார். அந்த வீட்டில் எவ ருமே இல்லை, அந்தப் பெரியவ ரைத் தவிர!
''நீங்கள் தனியாவா இருக்கி றீர்கள்?'' என்று கேட்டார் மருதநம்பி.
''ஆமாம், உட்காருங்கள். சில நாட்களுக்கு முன் உங்கள் மகள் இங்கே வந்து போனாள். நீங்கள் கொடுத்ததாக ஓர் அட் டைப் பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். உங்களுக்கு இவ்வளவு அழகான பெண் இருக்கிறாள் என்பது அன்று வரையில் எனக்குத் தெரியவே தெரியாது!''
''என்னுடைய குடும்பத்தின் அணையா விளக்கு அவள். என்னுடைய கெட்டகாலம் அவளையும் இழந்துவிட்டேன்! என் உயிரைக் கொடுத்தாவது மணிமொழியை இந்தக் கஷ்டத் திலிருந்து நான் விடுவிக்க வேண்டும்!''
''மணிமொழியா அவள் பெயர்? அவளை ஏன் நம்மு டைய கூட்டத்தில் சேர்த்தீர்கள்? வயதான இந்தக் காலத்தில்தான் நான் தவறுகளை உணர்கிறேன். என் தள்ளாத வயதிலும்கூட என்னால் என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ இயலவில்லை. பெரிய ஐயாவின் பிடியிலிருந்து விடுபடாத வரையில் நான் தனியாகவே வாழ விரும்பு கிறேன். போலீஸாரால் எந்த நிமிடமும் நம் கூட்டத்தாரைப் பிடித்துவிட முடியும்! வயதாகி விட்ட நீங்கள், இந்த நேரத்தில் எப்படித் தவறு செய்தீர்கள்?'' என்று இரக்கத்துடன் கேட்டார் பொன்மலை.
''எனக்கு உடல் நலமில்லாத நேரத்தில், என்னுடைய கறை படிந்த தொழிலைப் புரிந்து கொள்ளாத மணிமொழி, பெட்டிகளை எனக்காக எடுத் துச் சென்றாள். கேசவதாசுக் கும் ஒரு பெட்டி இருந்தது. அவள் கேசவதாஸின் வீட்டை அடைந்தபோது, கேசவதாஸ் செத்துக் கிடந்தார். அதிலிருந்து தான் தொல்லைகள் பல தொடங்கின. சென்னைக்கு மணிமொழியை அனுப்பிவிட்டு, உண்மைகளைக் கண்டு பிடிக் கக் கேசவதாஸ் பங்களாவுக்குச் சென்றேன்.
அங்கிருந்து திரும்பி வந்ததும் தான் அங்கே பல இடங்களில் என் கை ரேகைகளை விட்டு விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. நான் என் தவற்றை உணர்வதற்குள், போலீஸார் என்னைக் கைது செய்து காவ லில் வைத்துவிட்டார்கள்! சிறையிலிருந்த நான், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ விடுதியில் இருந்து குணமாகிக்கொண்டே வந் தேன். பெரிய ஐயா, மருத்துவ விடுதியிலிருந்து தப்ப எனக்கு வழி செய்து கொடுத்தார். நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.' என்றார் மருதநம்பி.
''இப்போது எங்கிருக்கிறாள் மணிமொழி?'' என்று கேட்டார் பொன்மலை.
''அதுதான் தெரியவில்லை! அவளைக் கண்டுபிடிக்கவேண் டும் என்று எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறேன். தங்கதுரையால்தான் என் மகள், தான் தங்கியிருந்த இடத்தைவிட்டு எங்கேயோ ஓடியிருக்கிறாள். தங்கதுரையே அவளைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருப்பானோ என்றுகூட எனக்கு ஐயமாக இருக்கிறது. முன்பொரு தடவை, மணிமொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நான், அவளை எங்கே தேடுவது என்று தெரியாமல் விழித்தேன். பிறகு, எப்படியும் பெட்டிகளைக் கொடுக்கும்போது, தங்கதுரையை அவள் சந்திப்பாள் என்று அவனைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந் தேன்.
நான் எதிர்பார்த்தபடி மணிமொழி தங்கதுரையின் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவன் அவளை அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டான். அப்போது மணிமொழியை நான்தான் விடுவித்தேன். ஆனால், நான் மறைந்திருந்து மணிமொழிக்குச் செய்த உதவி களெல்லாம் அவளுக்குத் தெரி யாது. நான் அவளைப் பார்த்து, சில உண்மைகளை அறியவேண் டும். என்னுடைய முயற்சியில் என் உயிரே போனாலும் குற்றமில்லை!
இப்போது உங்களிடம் வந்த காரணம் என்ன தெரி யுமா? கேசவதாஸ் கொலை வழக்கில் அசைக்கமுடியாத ஓர் உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறேன். அதைப் பற்றி உங்களிடம் சொல்லி, உதவி கேட்கவே வந்தேன். கேசவதாஸ் தற்கொலை செய்துகொண்ட தாகப் பெரிய ஐயா நினைத் திருக்கிறார். அது தவறு! கேசவ தாஸ் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை!'' என்றார் உறுதியான குரலில் மருதநம்பி.
இதைக் கேட்டதும் பொன் மலை நிமிர்ந்து உட்கார்ந்தார்.வியப்புடன் மருதநம்பியைப் பார்த்தார். ''அப்படியானால் கொலையாளி யார்?''
|