விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
விகடன் பொக்கிஷம்
ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
சுருளிராஜன் ஜோக்ஸ்

காபி குடிக்கலாம் என்று ஒரு நாள் தி. நகருக்குப் போனேன். காபியே கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா? அது Tea Nagar!

கடிகாரத்தின் மேலே கண்ணாடி ஏன் இருக்கிறது தெரியுமா?

அதிலே முள் இருக்கிறது. அது குத்திவிடக்கூடாதே, அதற்காகத்தான்!

பஸ் ஸ்டாப்பிலே பஸ் ஏன் நிற்கிறது தெரியுமா?

அதற்கு உட்காரத் தெரியாது, அதனால்தான்!

சேலத்தில் நானும் என் நடிக நண்பர் வெண்ணிற ஆடை மூர்த்தியும் வேக வைத்த வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டே அந்தக் காலத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென்று வெ.ஆ. மூர்த்தி ஏழு வேர்க்கடலைகளைத் தரையில் வைத்து அதைத் தாண்டிவிட்டு, ''ஆ...! நானும் விக்கிரமாதித்தன் தான்...! ஏழு கடலைத் தாண்டி விட்டேன்... ஏழு கடலைத் தாண்டி விட்டேன்!'' என்றார்.

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த வாஸ்கோடகாமா இப்போது இருந்தால், அவர் பெயர் என்ன தெரியுமா?

இஸ்கோடகாமா! ஏனென்றால் Was... Past Tense. Is... Present Tense.

உடல்நிலை சரியில்லை என்று டாக்டரிடம் போனேன். டாக்டர் என்னைப் பரிசோதித்துவிட்டு, ''ரொம்ப வீக்கா இருக்கீங்க... டெய்லி ஒரு பச்சை முட்டை சாப்பிடுங்க'' என்றார்.

"பச்சை முட்டைக்கு நான் எங்கே போறது டாக்டர்? எங்க வீட்டுக் கோழி வெள்ளை முட்டைதானே இடுது!'' என்றேன்.

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
சேலத்தில் பி. வி. டி. புரொடக்ஷன்ஸாரின் 'துணிவே துணை' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக எனக்கு வசனமே இல்லை. நின்றுகொண்டே இருந்தேன். கடைசியில் டைரக்டர்

எஸ். பி. முத்துராமனிடம், ''டைரக்டர் சார்! எனக்கும் ஏதாவது வசனம் கொடுங்க. பேசறேன். ரெண்டு நாளா பேசாம இருந்து வாயெல்லாம் ஒட்டடை அடைஞ்சு போச்சு'' என்றேன்.

என் நகைச்சுவையை ரசித்த டைரக்டர் என்னைப் பேச வைத்தார்.

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
சூட்டிங்கின்போது ஒரே வசனத்தை நாலைந்து முறை நடிக்கச் சொல்லிப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருந்த ரசிகர் ஒருவர், ''எதுக்குங்க ஒரே நடிப்பை நாலைஞ்சு தடவை எடுக்கறாங்க...?'' என்றார்.

"எத்தனை ஊர்லே படம் ஓடணும்? எல்லா ஊருக்கும் காப்பி தேவைப் படுமில்லையா? அதுக்காகத்தான்!'' என்றேன்.

ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!
ஏழு கடலைத் தாண்டினார் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி!