விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
சினிமா விமர்சனம்:
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

முனுசாமி | மாணிக்கம்

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

மாணிக்: ரொம்ப நாளைக்கப்புறம் எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடற 'ரோல்'ல வரார் இல்லே..?

முனு: கொஞ்சம் அதிகமாவே சண்டை போடறார்னு கூடச் சொல்லலாம்.

மாணிக்: இந்த மாதிரி ஒரு கப்பல் சண்டையும், தீவுக் காட்சிகளும் எடுத்திருக்கிறது தமிழ்ப் படத்துக்கு புதுசுதான் அண்ணே!

முனு: காட்சிங்க புதுசா இருக்கலாம்; கதை ரொம்ப பழசாச்சே! அதனாலதான் 'என் தாய்நாடு, விடுதலை, மக்களாட்சி, போராட்டம்' என்றெல்லாம் எம்.ஜி.ஆர். சொல்றபோது, நமக்கு எந்தவித வீர உணர்ச்சியும் ஏற்பட மாட்டேங்குது.

மாணிக்: என்ன சொன்னாலும் அண்ணே, கலர்லே எம்.ஜி.ஆர். ரொம்ப அழகா இருக்காரு.

முனு: ஏன், ஜெயலலிதாவுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்? சவுக்கடி டான்ஸின்போது பம்பரமாட்டமா சுத்திச்சுத்தி ஆடினது இன்னும் என் கண் முன்னால நிக்குதே!

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

மாணிக்: பெரிய மரம் விழற சீன் ஒண்ணு வருதே, அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே அண்ணே?

முனு: நம்பமுடியாத காட்சி தான்! ஆனா, சினிமாதானே!

மாணிக்: நாகேஷ் நல்லா, தமாஷா சண்டை போடறார்; எனக்கு ரொம்பப் பிடிச்சுது!

முனு: 'ஓடும் மேகங்களே'ங் கிற பாட்டு எப்படி?

மாணிக்: அதைவிட 'உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன்'ங்கிற பாட்டை நான் ரசிச்சேன் அண்ணே!

முனு: இந்தப் படத்திலே ஒரு புதுமை கவனிச்சியா? யாரையுமே சாகவிடல்லே!

மாணிக்: ஆமாம் அண்ணே! எத்தனையோ வில்லன்கள், எத்தனையோ சண்டைகள் இருந்தும், ஒரு சாவு கூட இல்லே! ஆயிரம் வில்லன்களுக்கு நடுவிலே ஒரு நல்லவனா எம்.ஜி.ஆர். வராரு. அதனால்தான் 'ஆயிரத்தில் ஒருவன்'னு பேர் வெச்சுட்டாங்கபோல இருக்கு!

 
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்
சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்