''நான் நடிக்க வந்ததே தற்செயலாகத்தான்! ஒரு தடவை அப்பாவும் நானும் பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்தோம். அப்போது, வாஹினி ஸ்டுடி யோவைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனபோது, கதிர் சம்பந்தம் என்பவர், 'இந்தப் பெண்ணுடைய முகம் அழகா இருக்கே! சினிமாவில் சேர்க்கலாமே!' என்று எங்கப்பா கிட்டே சொன்னார். எங்கப்பா வியாபாரமும் அப்போ கொஞ்சம் டல்லாயிருந்தது. ஸ்டுடியோவிலிருந்து நாங்க தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பி வந்து ஆலோ சனை செய்தோம். ஆனா, அப்பவும் நாங்க சான்ஸ் கேட்டு யாரையும் தேடிப் போகலை. ஜெயாங்கிற தோழி கிட்டே நான் அன்புப் பரிசாகக் கொடுத்திருந்த என் புகைப்படத்தை யதேச்சையாகப் பார்த்துவிட்டு, எல்.கே.பிலிம்ஸ் கம்பெனி, 101 ரூபாய் கொடுத்து, என்னை 'புக்' பண்ணினாங்க. அப்புறம், 'மீனவன் மகன்' படத்திலே நடிக்கணும்னு திரு.எம்.ஜி.சக்ரபாணி கூப்பிட்டு 101 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால், அந்த இரண்டு படமும் வெளி வரலை. அதுக்கப்புறம் நான் மூணு மலையாளப் படங்களில் நடிச்சேன். ஒரு மலையாளப் பட சூட்டிங்குக்காக கற்பகம் ஸ்டுடியோ போனபோதுதான் திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பார்த்து 'வாழையடி வாழை'க்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்.
'வாழையடி வாழை' படத்தில் நான் நடிச்சு ரிலீஸானபோது, ஜெமினி ஸ்டுடியோ அருகில் ஒரு பெரிய பானர் வெச்சிருந்தாங்க. அதிலே என்னுடைய 'கட் அவுட்'டும் இருந்தது. ஒரு நாள் இரவு 11 மணிக்கு மேல், ஜெமினிக்கு எதிரே போய் உட்கார்ந்துகொண்டு, தலையிலிருந்து கால் வரை என்னுடைய 'கட்அவுட்'டை நானே ரசிச் சுக்கிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந் தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது!''
|