அண்மையில் பெய்த பேய் மழையின் காரணமாக, சென்னை அடையாறும் கூவமும் கங்கையாகவும் காவிரியாகவும் உருமாறி, குடியிருப்புகளையும் குடிசைகளையும் விழுங்கி, ஆயிரக்கணக்கன மக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்து, கண்ணீர்த் தொடர்கதைக்கு முன்னுரை எழுதி வைத்துள்ளன.
கோட்டூர்புரத்திலும் வியாசர்பாடியிலும் பொன்னேரியிலும் இயற்கை நிகழ்த்தியுள்ள ஊழிக்கூத்து கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது. பகைவர் பட்டாளம் சூறையாடிவிட்டுச் சென்ற பட்டணம் போலன்றோ நகரின் சில பகுதிகள் காட்சியளித்தன!
குடிமக்களுக்குத் துயரம் நேரும்போது உதவி அளிப்பது அரசின் கடமையாவது போன்றே, துன்பங்களைத் தவிர்க்கவும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அரசின் தலையான கடமை ஆகிறது.
சென்னையை அடுத்துள்ள ஏரிகளையும் குளங்களையும் பராமரிக்கச் செய்து, ஆழப்படுத்தி, கரைகளைச் செப்பனிட்டுப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, பூந்தமல்லிக்கும் |