''முன்முடி, பின்முடி என்றால், விளங்கவில்லையே?''
''சரி, இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. கொஞ்சம் இருங்கள்'' என்று மறுபடியும் செக்ரெட்டரி எழுந்து உள்ளே போய்விட்டு, நொடியில் அரிசி, பருப்பு எல்லாம் எடுத்து வந்தார்.
''இப்போ நான் ஒரு மாடல் இருமுடியே தயாரித் துக் காட்டிவிடுகிறேன். நெய்த் தேங்காய் மட்டும் இப்போது போடமுடியாது'' என்று சொல்லிக் கொண்டே, இரண்டு சிறிய பைகளில் அரிசியைப் போட்டுக் கட்டினார். ஒன்றில் வெல்லம், மற்றொன் றில் பருப்புப் போட்டுக் கட்டி, ''இதோ பாருங்கள், நெய்த் தேங்காய்க்குப் பதிலாக இந்த வெறுந்தேங்காயை இந்தப் பையில் போடுகிறேன்'' என்று ஐந்தாவது பையில் தேங்காயைத் திணித்தார்.
''நெய்த் தேங்காய் என்றால் என்ன என்று அவர் கேட்டு நீங்கள் பதில் சொல்ல வேண் டாமே! அதையும் நீங்களாகவே சொல்லி விடுங்கள்'' என்று குரு சுவாமி வேடிக்கையாகச் சொல்ல, செக்ரெட்டரி பையில் திணித்த தேங்காயை வெளியில் எடுத்து, என்னிடம் அதன் குடுமி பாகத் தைக் காட்டி, ''இதோ கவனியுங் கள்... இந்தக் கண் வழியாகத் துவாரம் போட்டு, உள்ளேயுள்ள இளநீர் எல்லாவற்றையும் கொட்டி விட்டு, அதன் வழியாக நல்ல சுத்தமான பசு நெய்யை ஊற்றி நிரப்பி, வாயை கார்க் போட்டு மூடி, சீலும் வைத்துவிடவேண்டும். பிறகு, இதில் ஐயப்பனை மந்திர பூர்வமாக அமர்த்தி, விசேஷ பூஜை செய்து, இருமுடிப் பையின் முன் முடியில் வைக்க வேண்டும். தேங்காய்க்குள் நெய் அடைத்து பூஜை செய்துவிட்டால், உடனே சபரிமலை யாத்திரை புறப்பட வேண்டும்'' என்று சொல்லிக்கொண்டே இருமுடியைக் கட்ட ஆரம்பித்தார்.
|