ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஞானவிளக்கு

ஞானவிளக்கு


விகடன் பொக்கிஷம்
ஞானவிளக்கு
ஞானவிளக்கு
 
ஞானவிளக்கு
ஞானவிளக்கு
ஞானவிளக்கு
ஞானவிளக்கு

சென்ற நாற்பது ஆண்டுகளாகப் புதுவையிலிருந்து ஞான ஒளி வீசி வந்த தீபம் டிஸம்பர் 4-ம் தேதி இரவு 1-30 மணிக்குத் திடீரென்று அணைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. உண்மைதானா? நம்ப முடியவில்லை. எப்படி நம்ப முடியும்?

1927-ம் ஆண்டு முதல்தான்

ஞானவிளக்கு

அரவிந் தர் யோகியானார். அந்த நாள் முதல் அதே ஆசிரமக் கட்டடத்தில் வசித்துவந்தார். இவரு டைய திவ்ய ஞான ஒளியோ உலகெங்கும் பரவி வந்திருக்கிறது.

இந்த ஞான யோகிக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி யோடு 79-வது ஜன்ம தினம் பூர்த்தியாயிற்று. ஆனால், இவர் தந்த ஞானத் திற்கு வயதும் மூப்பும் உண்டா?

ஞானவிளக்கு

சென்ற நவம்பர் 24-ல் பக்தர்களுக்கும் சீடர்களுக் கும் தரிசனம் அளித்தார் - கடைசியாக! பூர்ண யோகத் துறவிலே இவர் மூழ்கிக் களித்த சுபதினம் அது. ஆனால், இவரது ஞான சொரூபத்தின் மங்கள தரி சனத்தை என்றும் காணலாம், இவர் வெளியிட்டிருக்கும் ஞானச்சுடர் நிலையமாகிய நூல்களிலே!

'இந்தியாவின் ஞானத் திறவுகோல் துருவேறிக் கெட்டுப்போய்விட்டது' என்று கருதுவோர் துருவைத் போக்கிச் சாவியை உபயோகித்துக்கொள்ளும் வழியே அரவிந்த மார்க்கம்!

அரவிந்தர் என்ற ஞான ஜோதி இந்தியாவின் சுதந்திர ஜோதியாகச் சுடர் வீசிய காலமும் உண்டு. காந்தியடி களின் சத்யாக்கிரக இயக்கம் தோன்றாத காலம் அது.

பிரிட்டிஷ் ராஜ வாழ்த்துப் பாடிக் கொண்டே தேசிய விமோசனமும் கிடைத்து விடும் என்ற மிதவாதம் பேசிச் சுகபோகம் விரும்பிப் பதவி வேட்டையாடி அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த அக்காலத்திலே, தேசிய ஆவேசம் கொண்டு சுயராஜ்ய மந்திரம் ஜபித்து சுதந்திரச் சுடர் விளக்கை ஜ்வாலை செய்து, ஒரு தீவட்டியாகத் தூக்கிப் பிடித்தவர் அரவிந்தர். 'வந்தே மாதரம்' என்ற பத்தி ரிகையின் ஆசிரியப் பிரதமராக வீற்றிருந்து, சொற்களுக்கு வெடிகுண்டுகளின் வேகத்தை யும் சக்தியையும் ஊட்டினார்.

இவர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு விஷயமாகத்தான் முதன் முதல் கைதியானார். சிறையில் ஒரு தனி அறையிலே இவரை அடைத்து வைத்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை கீதை, உபநிஷதம், வேதம் என்ற இந்திய ஞானப் பொக்கிஷத்தை மதிப்பிடப் பயன் படுத்திக்கொண்டார். யோகப் பயிற்சியிலும் தியானத்திலும் ஈடு பட்டு உண்மையளி காண முயன்றார். அதன் பயனாக, தேச பக்த ஞானி அருந்தவப் பெரு ஞானியாக வளர்ந்தோங்கி உலகத்திற்கே அருள் நிழல் வழங்க முன் வந்தார்.

இவ்விதமாக, இந்த உலகின் இருள் நீங்கி வந்துதித்த அரவிந்த ஞான தீபம் அணைந்து போக முடியுமா? சூட்சுமமாக இன்னும் பிரகாசிக்கும், மேன்மேலும் பிரகாசிக்கும் என்பது திண்ணம்.

 
ஞானவிளக்கு
ஞானவிளக்கு