ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

மக்கள் ஹீரோ வி.பி.சிங்

மக்கள் ஹீரோ வி.பி.சிங்


விகடன் பொக்கிஷம்
மக்கள் ஹீரோ வி.பி.சிங்
மக்கள் ஹீரோ வி.பி.சிங்
 
மக்கள் ஹீரோ வி.பி.சிங்!
மக்கள் ஹீரோ வி.பி.சிங்
மக்கள் ஹீரோ வி.பி.சிங்
மக்கள் ஹீரோ வி.பி.சிங்

''இந்திய அரசியலில் 1990 ஹீரோ யார்?'' என்கிற கேள்வியை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், பொதுமக்களில் சிலரைக் கேட்டோம்... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே, அதுபோல! அப்படிப் பார்த்ததில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வி.பி.சிங்கே ஹீரோ பட்டத்தை ஜெயிக்கிறார்!

மக்கள் கருத்துக்களில் வி.பி.சிங் பற்றிய கருத்துக்களை மட்டுமே இங்கு தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

சென்னையில்...

வீரராகவன் (வெல்டர்):

கொள்கைச் சிங்கம் வி.பி.சிங்தான் ஹீரோ என்பதில் சந்தேகமென்ன? பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் வாழ்வை முன்னேற்ற 'மண்டல் கமிஷன்' கொண்டுவந்தாரே..!

சரவணன் (மளிகைக்கடை வைத்திருப்பவர்):

சாட்சாத் வி.பி.சிங்! ராமஜென்ம பூமியில் பெரும்பான்மையினருக்கு விட்டுக்கொடுக்காமல், சிறுபான்மையினர் நலனைக் காத்தவர் அவர்தானே!

வைத்தியலிங்கம் (தள்ளுவண்டி பழக்கடைக்காரர்):

தான் முன் வைத்த கொள்கை களில் விடாப்பிடியாக இருந்து, பிரதமர் பதவியே போனாலும் பரவாயில்லைன்னு பதவியைத் துறந்த வி.பி.சிங்தாங்க நிஜ ஹீரோ!

குமார் (ஆட்டோ டிரைவர்):

வி.பி.சிங்தான்! ஆட்சியை இழக்கப்போவதை அறிந்தும்கூட, மனம் கலங்காம பார்லிமென்ட்ல மணிக்கணக்கா பேசினாரே!

கோவையில்...

ஜாகீர் உசேன் (சைக்கிள்கடைக்காரர்):

வி.பி.சிங்தாங்க! ஆட்சியில் இருந்தது பதினோரு மாசம்தான் னாலும் ஏதோ கொஞ்சம் நல்லது செய்ய முயற்சி பண்ணாரு!

திருச்சியில்...

மக்கள் ஹீரோ வி.பி.சிங்

எஸ்.சரவணன் (ஆடியோ சென்டர் பொறுப்பாளர்):

கொள்கை நேர்மைக்காகப் பதவியைப் துறந்தாரே வி.பி.சிங், அவர்தான் ஹீரோ!

ஆர்.ஆலம் ஷா (விரிவுரையாளர்):

சந்தேகமில்லாமல் வி.பி.சிங் தான்! மக்கள் கண்மூடித்தனமா வோட்டுப் போடற வழக்கத்தை மாத்தி, ஒரு காரணத்துக்காக வோட்டுப் போட வெச்சவர் இவர்.

ஜமால் முகமது (நகைத் தொழிலாளி):

வி.பி.சிங்தான்! மதச்சார் பின்மைதான் இந்தியாவோட பலம். அதைக் கட்டிக் காப்பாத்த ரொம்பக் கஷ்டப்பட்டாரு!''

மதுரையில்...

ஜான்மனோஹர் கில்பர்ட் (ஆட்டோ டிரைவர்):

வி.பி.சிங்தான்! கூட இருந்தவங்க முதுகில குத்தினபோதும், கொள்கைதான் பெரிசுன்னு உறுதியா நின்னு பிரதமர் பதவியைத் தூக்கியெறிஞ்சாரே...அதுதான் வி.பி.சிங்!

 
மக்கள் ஹீரோ வி.பி.சிங்
மக்கள் ஹீரோ வி.பி.சிங்