கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும். அதை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவன் ஒரு வேடன் தெரியாமல் எய்த அம்பு பட்டு மாண்டான் என்ற கதைதான் நமக்குத் தெரியும். அந்தத் தேதியும் தினமும் நமக்குத் தெரியாது. அதையும் நாம் அனுஷ்டிப்ப தில்லை. தீபாவளி கூட ஒரு சாப விமோசன சந்தோஷ நாளே தவிர, துக்க நாள் அல்ல!
நமது தேசியத் திருவிழா நாட் கள் அனைத்தும் சுபதினங்கள். பொய்யான சமுதாயப் பண்புகள் இந்தியாவுக்குச் சொந்தமல்லா தன.
ராஜகோபாலாச்சாரியார் மிகச் சிறந்த சுத்தமான இந்தியர்களில் ஒருவர். நேரு மறைந்தபொழுது கூட இவ்விதமே நினைத்தேன்.
மரணங்களல்ல... பிறவியே மனிதர்களோடு அதிகம் சம்பந்தம் உடையது. இந்திய நாட்டு மகான்களின் ஜனன தினத்தைக் கொண்டாடுகிறோம். அது மிகவும் அர்த்தமுள்ளதாய் இருக்கும்.
பரமஹம்சரும் விவேகானந்தரும் காந்தியும் நேருவும் ராஜாஜியும் இன்னும் எண்ணற்ற பெரியோர்களும் நம் இந்திய மண்ணில் பிறந்ததுதான் நமது பெருமை. மரணங்கள் எல்லா மண்ணுக்கும் சகஜம்தான்.
ராஜாஜி சம்பூர்ணமாகிவிட்டார். அவரது ஜயந்தி நாளைக் கொண்டாடுவோம்!
|