ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

அரசியல் மேதை!

அரசியல் மேதை!


விகடன் பொக்கிஷம்
அரசியல் மேதை!
அரசியல் மேதை!
 
அரசியல் மேதை!
அரசியல் மேதை!
அரசியல் மேதை!
அரசியல் மேதை!

ந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந் தது காரணமாக அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்திலும் மேல் படிப்பு படித்தார். 1923-ல் வக்கீல் தொழில் மேற்கொண்டார். 1930-32-ல் லண்டனில் கூடிய வட்ட மேஜை மகா நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்ஸே மாக்டனால்ட், 1932-ல் வகுப்புத் தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி, ஹரிஜனங்களை ஹிந்து சமூகத்திலிருந்து தனியே பிரித்துத் தனித் தேர்தல் தொகுதிகள் பிரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறையில் இருந்த காந்திஜி இதை எதிர்த்தார். ஹிந்து சமூகத்தைப் பிளவு செய்யும் இத்தீர்ப்பை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திஜியை விடுதலை செய்து, ஹரிஜனத் தலைவர்களுடன் சமரசம் பேசி ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொறுப்பை ஹிந்து சமூகத் தலைவர்களின் மீது சுமத்தியது.

ஹரிஜனத் தலைவர்களில் முக்கியமாக விளங்கியவர் டாக்டர் அம்பேத்கர். இவர் யாருடைய வாதத்திற்கும் மசியவில்லை. காந்தி ஜியோ ஓர் உடன்பாடு ஏற்பட்டாலொழிய தான் ஆரம்பித்த உண்ணா விரதத்தை நிறுத்துவதில்லை என்று சொல்லிவிட்டார். எத்தனையோ பேருடைய வற்புறுத்தலுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்காத அம்பேத்கர் ராஜாஜியின் வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்து, 'ஹரிஜனங்களுக்குத் தனித்தொகுதி வேண்டாம்' என்ற முடிவுக்கு இணங்கினார்.

அம்பேத்கர் 1951-ல் செப்டம்பரில் மத்திய மந்திரி சபையிலிருந்து ராஜிநாமா செய்தார்.

ஹிந்துமத சீர்திருத்த மசோதாவை அப்படியே மொத்தமாக நிறைவேற்றாவிட்டாலும், அதைப் பிரிக்க ஒப்புக்கொண்டு, திருமணம், விவாகரத்து ஆகிய பகுதிகளையா வது நிறைவேற்றவேண் டும் என்று தான் விரும்பியதாகவும் அதுவும் நிறைவேறாமல் போகவே மந்திரி சபையிலிருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்தார்.

1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி புது டில்லியில் காலமானார் டாக்டர் அம்பேத்கர். மூன்று வருட காலம் முனைந்து மகத்தான அரசியல் சாஸனத்தை உருவாக்கித் தந்த டாக்டர் அம்பேத்கருக்கு பாரத நாடு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

 
அரசியல் மேதை!
அரசியல் மேதை!