ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''ஐ லவ் ரஜினி!''

''ஐ லவ் ரஜினி!''


விகடன் பொக்கிஷம்
''ஐ லவ் ரஜினி!''
''ஐ லவ் ரஜினி!''
 
''ஐ லவ் ரஜினி!''
''ஐ லவ் ரஜினி!''
''ஐ லவ் ரஜினி!''
''ஐ லவ் ரஜினி!''

பாலிவுட்டில் செட்டுக்குள் நடித்ததற்கும், தமிழகத்தின் ஓரமான ஒரு கிராமத்தில் நடிப் பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

நிச்சயமாக! அங்கேயும் ராஜஸ் தான் பக்கத்தில் நிறைய கிராமங் களில் நடித்திருக்கிறேன். ஆனால், அங்கேயெல்லாம் வேடிக்கை பார்க்க வரும் பெண்கள் முரட்டுத் தனமானவர்கள். ஒதுங்கச் சொன் னால்கூடத் திட்டித் தீர்த்துவிடு வார்கள். ஆனால், இங்கே தமிழ்ப் பெண்கள் ரொம்ப அழகு! அழ காகத் தலைவாரியிருக்கிறார்கள்.அத்தனை பெண்களும் தவறாமல் பூ வைத்திருக்கிறார்கள். ஸோ க்யூட்!

வடக்கத்திய வரவுகள் எல்லாம் கவர்ச்சியை மட்டுமே மூலதன மாக வைத்துத் தமிழை கலக்கு கிறார்கள். நீங்கள் இப்படிச் சேலையில் இருந்தால் எப்படி?

வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பினால் போதாது. நடிப்பதற்கு ஸ்கோப்பும் வேண்டும். இந்தப் படத்தில் ('என்ஜினீயர்') கூடக் கவர்ச்சி உண்டு. ஆனால், அது பாடல் காட்சிகளில் மட்டும். ஸோ, இதில் நடிப்பும் உண்டு... நீங்கள் எதிர்பார்க்கிற கவர்ச்சியும் உண்டு!

இங்கேயிருந்து போய் உங்கள் ஊரில் கொடி பறக்கவிட்டிருக்கிறார்கள் எங்கள் தென்னிந்திய டைரக்டர்கள். உங்கள் ஊரில் என்ன கதைப் பஞ்சமா?

உங்கள் கதைகள் வலுவானவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால்தான் உங்கள் படங்கள் அதிகமாக அங்கே ரீமேக் செய்யப்படுகின்றன. ஆரம் பத்தில் இந்திப் படங்களும் பாடல் களும் இங்கே காப்பியடிக்கப் பட்டன. இப்போது உங்கள் முறை.

தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

கண்டிப்பாக! நல்ல கதையம்சம் உள்ள படங்களானால் நான் ரெடி!

உங்களுடைய தமிழ் அகராதி வார்த்தைகள் ஏதாவது..?

சுத்தமா தெரியாது! தெரிஞ்ச வார்த்தைகள் இதுதான்... வாங்க, போங்க, வணக்கம், சும்மாயிருங்க, பாட்டி காய்கறி வாங்கிட்டு வாங்க... அவ்ளோதான்!

அத்தனை நட்சத்திரங்களுக்கும் ரஜினி, கமலோடு நடிப்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி..?''

பின்னே... ரஜினியோடு நான் 'உத்தரிதக்ஷின்' படம் பண்ணியிருக்கிறேன். இன்னும் கமலோடு பண்ணவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா... கமல் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனா, ஐ லவ் ரஜினி!

 
''ஐ லவ் ரஜினி!''
''ஐ லவ் ரஜினி!''