அட்டகாசமாய் அறிமுகமாகியிருக்கும் ஊர்வசியைப் பாராட்டுவதா அல்லது அவரை அடையாளம் கண்டு, அரிதாரம் பூசி அமர்க்களப் படுத்தியிருக்கும் டைரக்ட ரைப் பாராட்டுவதா என்று தெரியவில்லையே!
குழந்தையும் கையுமாக பஸ்ஸில் வந்து இறங்கும் வாத்தியார் பாக்யராஜை ஊருக்குள் அழைத்துப் போகும்போது குறும்புத் தனம்; வாத்தியார் மீது ஏராளமாய் காதல் கொண்டு ''யோவ்! என்னை நீ கல்யா ணம் கட்டிக்கிறியா?'' என்று கேட்கிற வெகுளித்தனம்; வாத்தியார் மீது அபாண்ட மாகப் பழி சுமத்தி, 'கம்பல்ஸரி கல்யாணம்' செய்து கொள்ளும் போது நினைத்ததை முடித்துக் கொண்டுவிட்ட பெருமிதம்... இப்படிப் படம் நெடுக ஊர் வசியின் டாமினேஷன்தான்! (இன்றைய இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து நடிகைகளே உஷார்! உங்கள் அத்தனையும் பேரையும் ஓவர் டேக் செய்யக்கூடிய திறமை ஊர்வசியிடம் ஒளிந்திருக் கிறது!)
க்ளைமாக்ஸில் நடத்தப் படும் கர்ப்பத்தடை முகாமில் ஆபரேஷன் தியேட்டர் வரை ஊர்வசியை அழைத்துச் சென்றுவிட்டு, கடைசியில் டாக்டர் மூலமாக பிளேட்டையே மாற்றும் சாமர்த்தியம் இந்தக் கோயம்புத்தூர்க்காரருக்கு மட்டுமே சொந்தம்!
முதியோர் கல்வி வகுப்பில் எழுதத் தெரியாதவர்களின் கையைப் பிடித்து தீபா டீச்சர் 'அ' போடச் சொல்ல, உடனே அத்தனை 'மாணவர்'களும் சபலத்தோடு க்யூவில் நிற்கும் காட்சியில் தியேட்டரே கலகலக்கிறதென்றால் அதற்குக் காரணம் |