ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!

கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!


விகடன் பொக்கிஷம்
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
 
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
துணிச்சல்மிக்க கவர்ச்சி நடிகையைப் பேட்டி காண்கிறார் ஒரு நிருபர்.

''உங்கள் திரையுலகக் கனவு பற்றி...''

''மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக ஆவது...'' - பதில் அளித்தவாறு, அணிந்திருந்த இரவு கவுனின் 'ஸிப்'பைக் கீழ்நோக்கி இழுக் கிறாள். கவுன் தோளிலிருந்து சரிகிறது.

நிருபருக்குப் பின்னங்காலில் எறும்பு ஊர்வது போன்ற உணர்ச்சி.

''தற்சமயம் எவ்வளவு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?''

''14 படங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்...'' - இப்போது கவுன் முழுவதும் அவிழ்ந்துவிட்ட நிலை. உள்ளாடைகளே பாதுகாப்பு.

நிருபருக்குச் சங்கடம் அதிகமாகிறது.

அடுத்த கேள்வி... ''முத்தக் காட்சிகளில் நடிப் பது இந்தியப் பண்பாட்டுக்கு ஏற்றதா?''

''ஒய் நாட்? கதைக்குத் தேவைப்பட்டால் அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் தவறு இல்லை.'' - நடிகையின் கை 'பிரா'வின் பின் 'ஹூக்'குகளை மெதுவாகக் கழற்றுகிறது. அடுத்த கணம் 'டாப்லெஸ்'.

நிருபரின் நிலை மேலும் மோசமாகிறது. முதுகில் ஏதோ பிடுங்குவது போல் ஒரு வலி! திக்குமுக்காடுகிறார்.

''உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல...''

''அவர்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை. வணக்கம்!''

'பெட்டி கோட்'டும் நழுவ, போனை வைத்துவிட்டுப் போய், ஷவரைத் திறந்து ஆனந்தமாகக் குளிக்கத் தொடங்குகிறாள் அந்தக் கவர்ச்சி நடிகை.

நிருபரும் டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்துவிட்டு, கழுத்துவரை ஏறி வந்துவிட்ட எறும்பை ஒருவழியாகப் பிடித்து, ஜன்னலுக்கு வெளியே தூக்கியெறிகிறார்.

 
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!
- வி.நடராஜன்
கவர்ச்சி நடிகையுடன் ஒரு சூடான பேட்டி!