கனகா வரவு செலவு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள். போன மாதத்தைவிட மளிகைக் கணக்கு நூறு ரூபாய் கூடுதலாக வந்தது.
துண்டு விழுவதை எப்படிச் சமாளிக் கலாம் என்ற யோசனையுடன் கனகா எழுந்தபோது, ''யம்மா... யம்மா'' என்ற படி வந்தாள் வேலைக்காரி லட்சுமி.
''என்ன லட்சுமி?''
''அது வந்து... ஒரு ரெண்டு ரூவா இருந்தா தாங்கம்மா. எங்க அப்பனுக்கு ஜுரம். மாத்திரை வாங்கணும்.''
''இரு, சில்லறை இருக்கா பாக்கிறேன். இருந்த சில்லறையையும் காலையிலேயே ஐயா வாங்கிட்டுப் போயிட்டாரு'' என்ற முணுமுணுப்புடன் உள்ளே வந்து பீரோவைத் திறந்தாள் கனகா. ஒரு ரெண்டு ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டு வந்து லட்சுமியிடம் கொடுத்து, ''நல்ல வேளை! உன் அதிர்ஷ்டம், ஒரு ரெண்டு ரூபாய் கிடந்துச்சு'' என்றாள்.
''நல்லா இருப்பீங்கம்மா. வரேங்கம்மா'' என்று அதை வாங்கிக்கொண்டு போய் விட்டாள் லட்சுமி.
அந்த இரண்டு ரூபாய் இனி அவளிட மிருந்து திரும்பியா வரப்போகிறது! கனகா ஒரு பெருமூச்சுடன் உள்ளே போனாள்.
இரண்டு நாள் சென்றிருக்கும் - ''யம்மா... யம்மா'' என்றபடி வந்தாள் லட்சுமி.
''இந்தாங்கம்மா'' என்று இரண்டு ரூபாயைத் திருப் பிக் கொடுத்தாள்.
'இவளிடம் திரும்ப வாங்கினால் என் கௌரவம் என்னாவது?' என்று யோசித்த கனகா, ''அட... இதைக் கொடுக்கத்தான் வந்தியா! பரவாயில்லை, நீயே வெச் சுக்க'' என்றாள்.
''இல்லீங்கம்மா, வாங்கிக் குங்க. நாங்களாச்சும் அங்க இங்க அலைஞ்சு வாங்கிடு வோம். நீங்க ஒரு அவசரம்னா யார்கிட்டே கையேந்த முடி யும்? எனக்கு எல்லாம் புரியும்மா. நான் புரியாத வள்னு நினைச்சுப்புடா தீங்க'' என்று லட்சுமி ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போக, பிரமிப்புடன் நின்றாள் கனகா.
|