ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஆசை வெட்கமறியும்... - மணியன்

ஆசை வெட்கமறியும்... - மணியன்


விகடன் பொக்கிஷம்
ஆசை வெட்கமறியும்... - மணியன்
ஆசை வெட்கமறியும்... - மணியன்
 
ஆசை வெட்கமறியும்... - மணியன்
ஆசை வெட்கமறியும்... - மணியன்
ஆசை வெட்கமறியும்... - மணியன்

ந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செய் யக்கூடாது. விவேகமின்மை விபத்தை விளைவிக் கிறது. எதையும் ஆராய்ந்து, காரியங்கள் செய்ப வனை நன்மைகள் தாமாக வந்தடைகின்றன. செல்வம் எப்போதுமே குணங்களைப் பின்பற் றும்.

- பாரவி. கிராதார்ஜுனியம்

ஆசை வெட்கமறியும்... - மணியன்

டெலிபோன் மணி அலறிக்கொண்டிருந்தது.எல்லாம் தோழிகளிடமிருந்து வந்தவைதான்.

''கமலா, இன்னிக்கு மிஸஸ் பார்வதி லட்சுமணன் வீட்டில் விசேஷ பூஜையாம். போகலாமா?''

''ஸாரி, நான் இன்னிக்கு வரலை!'' - போனை வைத்துவிட்டாள் கமலா.

''ஏண்டி கமலா, அலையோ அலைன்னு அலைஞ்சோமே, 'என்டர் தி டிராகன்' டிக்கெட் கிடைச்சுட்டுது. உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிட்டோம். நேரா தியேட்டருக்கு வந்துடு!'' - இன்னொரு தோழி.

''இன்னிக்குத் தலைவலிடி! நான் வரலை.'' - பளிச்சென்று வைக்கப்படுகிறது போன்.

விதவிதமான அழைப்புகள்.ஒவ்வொருத்தியிடமும் பேசி விட்டு போனை வைக்கும் போது, கமலாவின் உள்ளம் பிரமை பிடித்து உறைந்து விடும். தன்னோடு பேசிய வளின் வாழ்க்கை அமைப்பு, அவளுடைய புருஷன் அவள் மேல் அன்பைக் கொட்டுவது, அவளிடம் மட்டுமே அன் பைக் கொட்டுவது போன்ற நினைவுகள்...

அந்த நினைவுகளின் அழுத் தத்தோடு தன் கணவனின் போக்கையும் நினைத்துக் கொள்ளும்போது மனம் வீறிட்டு அழும். அவளுடைய தாம்பத்யத்துக்கு ஆதாரமாக இருந்த ஒரு நூல் அறுந்து விட்டதா?

அந்த நூலைத்தான் அவள் இதுவரை தூண் என்று பலமாக நம்பி, சர்வ அலட்சியமாக வாழ்ந்து வந்தாள்.

கணவன் தனக்குத் துரோ கம் செய்யமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை அவள் மனசில் தூணாக இருந்தது. அது உண்மையில் நூலாகத்தான் இருந்திருக்கிறது. அந்த நூலும் இப்போது இற்று, அற்றுப் போய்விட்டது.

இதுவரை தன் கணவன் தன்னிடம் அன்பைப் பொழிந்தது, மூச்சுக்கு மூச்சு 'கமலா, கமலா' என்று குழைந் தது எல்லாமே வெற்று வார்த்தைகள் தானா? அந்த அந்தரங்க துரோகத்தைக் கண்டுபிடித்து விடாமலிருப்பதற்காகப் பூசப்பட்ட பசப்புத் திரைதானா?

எல்லாச் சாயமும் நேற்றிரவு வெளுத்துவிட்டது.

ஆசை வெட்கமறியும்... - மணியன்

உஷாவிடமிருந்து வந்த போனை பிரபு மறைத்த விநாடியே, கமலா விழித்துக்கொண்டாள். அவளுடைய உள்ளம் மட்டும் விழித்துக் கொள்ளவில்லை. கண்களும் தூங்க மறுத்துவிட்டன.

மனைவியைத் தூங்க வைத்துவிட்டு, நள்ளிரவில் உஷாவோடு நிச்சயித்திருக்கும் எங்கேஜ்மென்ட்டை நிறை வேற்றப் புறப்படுவதற்காகப் பிரபு துடித்துக்கொண்டு இருந்தான். எட்டரை மணிக்கே தூக்கம் வந்துவிட்டதாக நடித்துக்கொண்டு படுத்தான்.

''கமலா, உனக்குத் தூக்கம் வரவில்லையா?'' என்று தளுக் காக அழைத்தான்.

''எனக்குத் தூக்கம் வர வில்லை. நாளைக்கு கிருத்திகை. வீடெல்லாம் அலம்பிவிட வேண்டியிருக்கிறது. வேலைக் காரியைக்கூட நிறுத்தி வைத் திருக்கிறேன்'' என்று கீழே இறங்கிப் போய்விட் டாள் கமலா.

அரை மணி நேரத்திற் கெல்லாம் பிரபு மாடியி லிருந்து இறங்கிக் கீழே வந்து நின்றான்.

''என்ன, தூங்க லையா?'' - கமலா அவனு டைய வயிற்றெரிச்ச லைக் கிளறிவிடுவது போல் கேட்டாள்.

''நீங்கள் வீடு கழுவு கிற ரசனையில் யாருக் குத் தூக்கம் வரும்? அர்த்தராத்திரியில்தான் வீடு கழுவுகிறதா? போதும், போதும்! காலையில் கழுவ லாம்'' என்று இரைந்தான்.

மற்றொரு சந்தர்ப்பம் என்றால், கணவன் சொல்லி முடிக்குமுன் வேலைக்காரியிடம், ''போதும்டி சடையம்மா! ஐயா சொல்றாரில்லே...நாளைக் காலையிலே பார்த்துக்கலாம். நம்ம காரியம்தான் பெரிசா! நீ காலையிலே வரலேன்னாலும், நான் கவனிச்சுக்கிறேன்'' என்று ஒரே நேரத்தில் தன் பதிபக்தியையும், வேலைக்காரி இல்லாவிட்டாலும் தன்னால் எல்லாக் காரியத்தையும் செய்யமுடியும் என்ற தற்பெருமையையும் அட்டகாசமாக நிலைநாட்டிக் கொள்வாள். அது, கமலா இதுவரை நடத்தி வந்த வெகுளித்தனமான வாழ்க்கை ஓட்டத்தின் போக்கு.

இன்று அவள் விழித்துக் கொண்டவள். அதனால் பிரபு சிடுசிடுத்ததும், ''நீங்க மாடியிலே ஏர்கண்டிஷனை போட்டுட்டுத் தூங்கறீங்க. கீழே வீடு அலம்பறது உங்க ளுக்கு எப்படி இடைஞ்சலா இருக்கும்? போய்த் தூங்குங்க. காலையிலே கோயிலுக்குப் போகணும். இப்பவே வீட்டையெல்லாம் கழுவிவிட்டால்தான் சரியாயிருக்கும்'' என்றாள் பளிச்சென்று.

அதற்கு மேல் கமலாவிடம் போரிட எவ்விதத் தர்க்க நியாயமும் பிரபுவின் சார்பில் இல்லை. ஆனால், மனம் எங்கோ லயித்துப் பரபரத்துக்கொண்டு இருக்க, கமலா அடம்பிடித்து, நந்தியாய்க் காரியங்கள் செய்துகொண்டிருந்தது அவனுக்கு ஆத்திரத்தைக் தந்தது. செயலற்று, உருப்படியாக எதையும் செய்யத் தோன்றாதவனாகச் சிந்தனை வறண்டு நிற்கும்போது மனிதனுக்கு ஏற்படுகிற உணர்வுதானே ஆத்திரம்!

பிரபுவுக்கும் அப்படித்தான் ஆத்திரம் வந்தது.

''நான் எக்கேடு கெட்டாலும் உனக்கு உன் வேலைதான் பெரிசோ?'' என்று கூச்சல் போட்டான்.

'நீங்கள் எக்கேடாவது கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக நான் செய்கிற வேலைதான்' என்று சொல்லா மல் சொல்வதுபோல், அவனைப் பொருட்படுத்தாமல் பக்கெட்டிலுள்ள தண்ணீரை மொண்டு தரையில் ஊற்றிக் கழுவிக்கொண்டிருந்தாள் கமலா.

சீற்றத்துடன் பக்கெட்டை உதைத்து விட்டு மாடியேறினான் பிரபு. அதனால் அவன் கால் விரல்களில்தான் வலி ஏற் பட்டதே தவிர, கமலா அசையவில்லை.

மணி பதினொன்றரை, பன்னிரண்டு ஆகிவிட்டது. உஷா காத்துக்கொண்டு இருப்பாள், பல கனவுகளுடனும்... தன்னுடைய பல கனவுகளை நனவாக்கும் உள்ளத்துடனும்..! அந்த நினைவு அவனைச் சூடேற்றிக் குமுற வைத்தது.

''என்ன... இன்னுமா கீழே கூத்தடித்துக் கொண்டிருக்கிறே?'' - மாடியிலிருந்து கத்திப் பார்த்தான்.

''வேலை இன்னும் முடியலை. இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும்!'' - ரொம்பவும் சாவகாசமாக பதில் வந்தது கமலாவிடமிருந்து.

எரிமலை வெடித்துவிட்டது.

முதன்முறையாக அவர்க ளுடைய தாம்பத்ய பந்தத்தின் பலம் அப்போது சோதனைக்குள்ளாகியது.

வீட்டைப் பொறுத்தவரையில் குழைவாகவும், ரொம்பவும் நாகரிகமாகவும் நடந்துகொண்டிருந்த பிரபு, ஆசா பங்கம் ஏற்பட்ட கொதிப்பில் முதன்முறையாக கமலாவை 'பொறுப்பற்றவள்... திமிர் பிடித்தவள்' என்று தீட்டித் தீர்த்தான்.

அந்த விநாடியே கமலா உடைந்து போய்விட்டாள். எவளோ ஒருத்தியின் நினைவில் தன் கணவர் தன்னைத் திட்டுகிறார் என்ற உண்மை பளிச்சிட்டபோது, யாரோ திராவகத்தைக் தன் மீது கொட்டியது போலிருந்தது கமலாவுக்கு. எவளோ ஒருத்தியிடம் சல்லாபிக்கச் செல்வதற்காக, தன் கணவர் தன் கௌரவம், அந்தஸ்து குடும்பப் பொறுப்பு, மனைவி என்ற பந்தம் எல்லாவற்றையும் உதறிவிட்டு, அர்த்தஜாமத்தில் ஒரு நாலாம்தர மனிதராக நடந்துகொள்கிறார் என்ற உண்மை ஒரு பூதாகரமான அதிர்ச்சியாக அவள் நெஞ்சைத் தாக்கியது.

அந்தக் குமுறலில் அவள் கத்த, அவன் திரும்பிக் கத்த, அன்றைய இரவு அந்த வீட்டில் ஒரு ரசாபாசக் கூச்சலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

இரவு இரண்டு மணி. தன் திட்டம் நொறுங்கியதும், நிராசை யுடனும், தன் வீட்டுக்குள் தன் அருகே தன் சந்தோஷத்துக்கு எதிரியாக இருக்கும் பரம வைரி யாக மனைவியை நினைத்துக் குமுறிக்கொண்டும் இரவைத் தள்ளிக்கொண்டிருந்தான் பிரபு.

அதே சமயம், எந்தக் கணவன் தன் பெண்மைக்குப் பாதுகாவ லனாக இருப்பான் என்று நம்பி ஒரே கூரைக்குள் குடியிருக்கிறாளோ, அந்தக் கணவனே தன் பெண்மைக் கௌரவத்தையே சிதைத்துப் பலி கேட்கும் துர்த்தேவதையாகிவிட்ட ஆசாபங்கத்துடன் கூனிக் குறுகிச் சுருண்டு படுத்தாள் கமலா. அவள் தூங்கவில்லை.

அவள் இரவில் தூங்காமலிருப் பது புதிதல்ல. எத்தனையோ இரவுகள் முழுமையாகவே பிரபு - கமலா ஜோடியின் இன்பத்திற்குச் சாட்சியாக நின்று கலைந்திருக் கின்றன.

அன்றும் ஒரு தூங்காத இரவு தான். ஆனால், எவ்வளவு வித்தி யாசம்! இந்த இரவோ, மங்கிப் போன உறவுக்குச் சாட்சி!

விடிந்தது.

கணவனுக்கு 'பெட் காபி' எடுத்துக்கொண்டு போக, கமலா வரவில்லை. சாமா ஐயரே இரண்டு காபித் தம்ளருடன் மாடியேறினார்.

மூன்றாவது நிமிடம் ஐயர் திரும்பி வந்தார். காபி தம்ளர்கள் தொடப்படவில்லை.

''தேவையில்லை'' என்று இருவரும் மாற்றிச் மாற்றிச் சொல்லவே, ஐயர் திரும்பிவிட்டார்.

அவர் வந்த அரை மணி நேரத்துக்குள், ஒரு ப்ரீஃப்கேஸூடன் பிரபு படி இறங் கிக்கொன்டிருந்தான். அவ்வளவு சீக்கிர மாக அவன் ஆபீசுக்குப் புறப்படுவது அதுவே முதல் தடவை. அவனைத் தொடர்ந்து, புடவை முன்றானையால், அழுது சிவந்துபோன கண்களைத் துடைத்துக்கொண்டு, பின்னாலேயே வந்தாள் கமலா.

அவளை ஏறெடுத்தும் பார்க்காமலே, பிரபு புறப்பட்டுவிட்டான்.

வரவேற்பறை சோபாவில் வந்து உட்கார்ந்தாள் கமலா. அவள் உள்ளம் கூசிச் சுருண்டு போய்விட்டது.

அவள் வாழ்க்கை முதன்முதலாகக் கேள்விக்குறியாக மாறியிருந்தது. வாழ்க்கையை ஒரு கேள்விக்குறியாக அவள் பார்த்ததும் அன்றுதான்; வாழ்க்கை அவளை ஒரு கேள்விக்குறியோடு பார்த்ததும் அன்றுதான்.

காலையிலிருந்து அந்த சோபா விலேயே பிரமை பிடித்திருந்தாற்போல் உட்கார்ந்திருந்தாள் கமலா. தோழிகளு டைய போன் அழைப்புகள், பசி, தாகம் எதுவும் அவளை அசைக்கவில்லை. துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை இளம்பிள்ளை வாதத்தில் சோர்ந்து சுருண்டு கிடப்பது போல், அவள் மனமும் சுருண்டு கிடந்தது.

வேலைக்காரி வந்து தலையை நீட்டி, ''அம்மா, இன்னிக்குக் கோயிலுக்குப் போகலையா... கிருத்திகையாச்சே?'' என்று நினைவுபடுத்தினாள். கிருத்திகை தோறும் வடபழனிக்குப் போவது கமலாவின் வழக்கம்.

''என் மனசுக்குள்ளே நான் கட்டியிருந்த கோயில் இடிஞ்சுபோச்சு'' என்றாள் கமலா.

மாலை ஆறு மணி.

கமலாவுக்கும் பிரபுவுக் கும் இதுவரை பெரிதாகச் சண்டை ஏற்பட்டதில்லை. இழைவு இருந்தால்தானே மோதலும் ஏற்படும்? பிணைப்பே இறுக்கமாக இல்லாவிட்டால், மோதல் மட்டும் எப்படி வரும்? இருந்தாலும், எப்பவாவது ஓர் அற்பச் சண்டை ஏற்படு வதுண்டு. அந்தச் சண்டை வரும்போது, பிரபு சாயங் காலம் சீக்கிரமாகவே வந்து விடுவான். வந்ததும் அவளைத் தேற்றிச் சிரிக்க வைத்துவிட்டுத்தான் மறு வேலையே பார்ப்பான்.

அந்தக் கணக்கில், ஆபீசில் முன் அனுமதி பெற்று, நான்கு மணிக்கே அவன் வந்துவிடுவான் என்று கமலாவுக்கு மின்னல் போல் எண்ணக்கீற்று அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டு இருந்தது.

ஆனால், ஆறு மணியாகியும் அவன் வரவில்லை.

திடீரென்று கார் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து பிரபுவின் அலுவலக உதவியாளர் ஒருவர் இறங்கி வந்தார். ''அம்மா! ஐயாவோட டிரஸ் எல்லாம் இருக்கிற சூட் கேஸைக் கொடுங்க. சீட்டு கொடுத்திருக்கிறார்'' என்று ஒரு துண்டுக் கடிதத்தை நீட்டினார்.

அந்தக் கடிதத்தில் இரண்டே வரிகள்தான் இருந்தன.

'திருமதி கமலாவுக்கு,

வரும் நபர் வசம் என் சூட் கேஸைக் கொடுத்தனுப்பவும். - பிரபு.'

''அவர் எங்கேயாவது அவசர மாக டூர் போகிறாரா?'' என்று விசாரித்தாள்.

''தெரியாது'' என்று பதில் வந்தது.

அந்நியரிடம் அதற்கு மேல் எதுவும் விசாரிக்க முடியவில்லை. கடிதத்தில் கண்டபடி சூட்கேஸை எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டு, என்ன, ஏது என்று எதுவும் புரிந்துகொள்ள முடியாத கலக் கத்துடன் வெறித்தாற்போல் உட்கார்ந்திருந்தாள்.

அச்சமயம் போன் ஒலித்தது.

எடுத்துக் கேட்டாள்.

''கமலாதானே?''

''ஆமா!''

''நான் வீணா பேசறேன்.''

''என்ன வீணா?''

''உன் வீட்டுக்காரர் சூட்கேஸூக் குச் சொல்லியனுப்பியிருக்கிறார், இல்லையா?''

வீணாவின் கேள்வியைக் கேட்டதும் திகைத்தாள் கமலா. இவளுக்கு எப்படித் தெரிந்தது?

''ம்ம்...'' மிடறு விழுங்கினாள்.

''அவர் எங்கே போகிறார் என்று தெரியுமா?''

''தெரியாது..!'' - கமலா தயக்கத்துடன் சொன்னாள்.

''வேறெங்குமில்லை. என் வீட் டுக்குத்தான் வருகிறார்.''

வீணாவின் குரல் அமைதியாக ஒலித்தது.

''உன் வீட்டுக்கா?'' - பதற்றத் துடன் கேட்டாள் கமலா.

''ஆமா. ஐந்து மணிக்கு பிரபு என் வீட்டுக்கு வந்தார். 'வீட்டில் நிம்மதி இல்லை. கொஞ்ச நாள் வெளியூர் போகலாம்னு நினைக் கிறேன். நீயும் கூட வருகிறாயா? உன்னோடு சில நாள் தனியாக இருக்கவேண்டும் என்று நினைக் கிறேன்' என்று என்னைக் கேட் டார். 'என்னோடு தங்க வேண்டு மானால் வெளியூர் போவதைவிட உள்ளூரிலேயே தைரியமாக இருக் கலாமே? அப்படிப் பகிரங்கமாக என்னோடு தங்க உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் இங்கேயே இருப்போம்' என்று சொன்னேன்.அவரும் சம்மதித்து சூட்கேஸூக்கு சொல்லியனுப்பினார். அந்த விஷயத்தை உனக்குச் சொல்வதற் காகத்தான் போன் பண்ணினேன். பிறருடைய எந்தப் பொருளையும் எடுப்பதற்கு முன் தகவல் சொல்லிவிடுவதுதானே முறை! அதன்படி உனக்குச் சொல்லி விட்டேன்'' என்று கூறி, பளிச்சென்று போனை வைத்தாள் வீணா.

அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள் கமலா.

 
ஆசை வெட்கமறியும்... - மணியன்
- தொடரும்
ஆசை வெட்கமறியும்... - மணியன்