ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா

இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா


விகடன் பொக்கிஷம்
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா
 
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா

1. தண்ணீர் விடும் பால்காரனிடமும், கண்ணீர் விடும் மனைவியிடமும் ஒரு தந்திரமும் பலிக்காது! - கிரகஸ்தர்

2. வாத்தியார் ஒரு காதைத் திருகினால் நீ அவருக்கு மற்றொரு காதைக் காட்டு. அவர் அதையும் திருகினால் நீ உன் முஷ்டியைக் காட்டு. - மாணவன்

3. எவன் அடுத்த வீட்டுக்காரருடன் சண்டை போடுகிறானோ, அவன் நிச்சயமாக சொந்தப் பத்திரிகை வாங்குபவனாக இருப்பான். - இரவல் பேர்வழி

4. கதை எழுதத் தொடங்குவதற்கு முன் 'நான் எழுதவில்லை என்று யாரவது அழுதார்களா?' என்று உன்னையே கேட்டுக் கொள். உண்மை புலனாகும். - பத்திரிகை ஆசிரியர்

5. 'ஏன் பிறந்தோம்?' என்று நீ ஒருபோதும் சலித்துக் கொள்ளாதே! 'ஏன் பிறந்தான்' என்று வருத்தப்படுவதற்குதான் உன் பெற்றோர்கள் இருக்கிறார்களே! - ஆப்த நண்பன்

6. கிளப்பில் மௌனமாயிரு; டெலிபோனிலும் பேச்சைக் குறைத்துக் கொள். இல்லாவிட்டால், கச்சேரியில் பேச விஷயம் இருக்காது. - சபா ரசிகை

7. கொடுத்த கடனை வசூலிப்பதைவிட, புதிய கடன் வாங்குவது சுலபம்! - அனுபவசாலி

8. எல்லாக் குழம்பிலும் உப்பு உண்டு, ஆனால் எல்லா உப்பும் குழம்பில் இருக்கக்கூடாது. - புது கணவன்

9. சாயந்திரம் வீட்டுக்குப் போனால் கஷ்டம்; வெளியே சுற்றியால் நஷ்டம். ஆபீஸில் இருப்பதே சுகம்! - சம்சாரி

10. படம் எடுக்கவேண்டும் என்று உனக்குத் தோன்றுவது உன் போதாத காலம்; படத்தை எடுத்து முடித்துவிட்டால், அது பணம் போட்டவரின் கஷ்ட காலம்; தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாவிட்டால், அது ரசிகர்களின் நல்ல காலம்!

 
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா
- சினிமா விசிறி
இப்படியும் ஒரு பொன்மொழிகள்! - மெரீனா