வீட்டுக்காரர்: (ரேடியா ரிப்பேர் செய்ய வந்தவரிடம்)
நம்ப ரேடியோ ரொம்ப ஸ்லோவா போவுதுங்க... திங்கட்கிழமை புரோகிராம் எல்லாம், செவ்வாய்க்கிழமைதான்
கேட்குது!
வானிலை ஆராய்ச்சி நிலையத்தில்
வேலை செய்து கொண்டிருக்கும் இருவரும்
வெளியே பெய்யும் மழையைப் பார்த்து...
''நான் குடை கொண்டு வரல்லே!''
''நானும் ரெயின் கோட் கொண்டு வரல்லே.
இன்னிக்கு மழை வரும்னு யாருக்குத் தெரியும்?''
டாக்ஸி டிரைவர்: சார்! கிளம்பும்போது மீட்டர் போட மறந்துவிட்டேன்.
இப்போது எப்படிப் பணம் கொடுக்கப் போகிறீர்கள்?
மானேஜர்: நானும் கிளம்பும்போது பர்ஸைக் கொண்டு வர மறந்துவிட்டேன். எனக்கும் இப்போது எப்படி பணம் கொடுக்கப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை.
''உனக்கு அந்த கிளார்க் வேலை பிடிச்சிருக்கா..?''
''ஓ..! அங்கே நான் வைத்ததுதான் சட்டம்!
காலையிலே ஒன்பது மணிக்கு முன்னே
எப்போ வேணுமானாலும் போகலாம்.
சாயந்திரம் ஆறு மணிக்கு அப்புறம்
எப்போது வேணுமானாலும் வந்துடலாம்..!''
''என்ன சார் இது?
ரெண்டு மாசமா நம்ப ஹோட்டல்ல தங்கி இருந்தீங்க...
திடீர்னு கோவிச்சுக்கிட்டு போறீங்களே..!''